பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தலைமையாசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா

 2021ம் ஆண்டிற்கான  தமிழக அரசு கல்வித்துறையின் உயரிய விருதான  டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்காக  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் அவர்களுக்கு பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது . வீழாவிற்கு  பள்ளி செயலர் திரு. டி.வி .சுப்பிரமணியன் அவர்கள் தலைமைவகித்தார்கள் . ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு. S .S . ரெங்கன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி வரவேற்புரை யாற்றினார் . பள்ளி செயலர் செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் அவர்கள் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள் . இந்த நிகழ்வில் தலைமையாசிரியர்  திரு ம . ராம் சந்தர் தான் பெற்ற விருது தொகையான ரூபாய் 10000/-த்தினை பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு அளித்து  ஏற் பு ரையாற்றினார்கள் .இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் குப்புசாமி, அமுதவல்லி, டேக் வொண்டோ  பயிற்சியாளர் திரு. பாரதிராஜா, கண்டப்பட்டி மனோகரன், பாலமுரளி ,அம்பை சபரி ஜெராக்ஸ் சட்டநாதன் , வீரவநல்லூர் சந்தோஷ் பர் னி ச்சர்  ஐயப்பன் ,பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.சுப்புலட்சுமி ராம்சந்தர்  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆசிரியை திருமதி. ஜேஸ் மாலா  நன்றி கூறினார்கள்  விழாவில் ஆசிரியர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.







LJK- அன்புக்கரங்கள் அறக்கட்டளை-வாழ்த்து

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்திய  
லட்சியஜனநாயககட்சியின் நிறுவனத்தலைவர் திரு .நெல்லைஜீவா அவர்கள் நம் பள்ளிக்கு வருகைதந்து நேரில் சந்தித்து, மலர்கொத்து கொடுத்து -வாழ்த்துக்களை தெரிவித்து நம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். உடன் எல்ஜேகே நிர்வாகிகள் அன்புக்கரங்கள் அறக்கட்டளை து.திலக்ராஜா. B.com,மாவட்ட இளைஞரணி செயலாளர்,பி.மணிகண்டன்
தகவல் தொழிற்நுட்ப அணி,முகநூல் நண்பர்கள் குழு :-
திரு. டேவிட்
திரு. மாவடி பிராங்ளின்
திரு.டேனியல் ஆசிர்
திரு. பச்சிராஜன்
ஆகியோர் கலந்துகொண்டனர்  . அனைவருக்கும் எம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

 





CHROME CAST வழங்கிய கல்வி 40

நம் அரிகேசவநல்லூர்  நடுநிலைப்பள்ளிக்கு  பம்பில்பி அறக்கட்டளை சார்பாக   கல்வி40  செயலியினை மாணவர்கள்  பார்ப்பதற்கு  ஏதுவாக CHROME CAST வழங்கி   கல்வி 40 குறித்த பயிற்சியினை  திரு. பரத் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள். அன்னாருக்கும்   இதற்கு ஏற்பாடு செய்த முக்கூடல் SSKV  சாலா தொடக்கப்பள்ளி  ஆசிரியர் திரு. ஆண்டோ குழந்தை ராஜேஷ் அவர்களுக்கும்  பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறோம் .




நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களைப்பாராட்டிய மலபார் கோல்டு நிறுவனம்

 திருநெல்வேலி மாவட்டத்தில்  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களைப்பாராட்டிய மலபார் கோல்டு நிறுவனம்திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு. முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார்கள். சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர்.சுடலை அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . மலபார் கோல்டு நிறுவன மேலாளர் திரு. பாசில்  பரிசு வழங்கி பாராட்டினார்கள். 




நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய பசுமை நகர் அரிமா சங்கம்

 நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய பசுமை நகர் அரிமா சங்கம்  சார்பாக திரு. lion  திருமலைமுருகன் அவர்கள் பாராட்டினார்கள் . விருது பெற்ற ஆசிரியர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. முத்து கிருஷ்ணன் அவர்கள் ,சேரன்மகாதேவி மாவட்டக்  கல்வி அலுவலர் நல்லாசிரியர்  முனைவர்.சுடலை அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ரேணுகா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்கள் . வாழ்த்திய திரு. lion  திருமலைமுருகன் அவர்களுக்கு  மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது-2021

தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு. விஷ்ணு இ.ஆ.ப. அவர்களின் பொற்கரங்களால் பெற்றுக்கொண்டேன். இவ்விருதிற்கு பரிந்துரை செய்த பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கும்,திரு நெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருது பெற ஊக்கசக்தியாக திகழ்ந்து வரும் எம் பள்ளி செயலர் அவர்களுக்கும், எம் பள்ளியின் புரவலர்களுக்கும், என் பெற்றோருக்கும், என் குடும்பத்தினருக்கும், என்னுடன் பணியாற்றும் எனது ஆசிரியர்களுக்கும், என் நண்பர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,ஊர்பொதுமக்களுக்கும் எனதன்பு மாணவச்செல்வங்களுக்கும்  மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்