பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 16 மார்ச், 2020

வாகை சூடிய மாணவர்கள்

NAGA MEMORIAL TAEKWONDO CHAMPIONSHIP 2020போட்டியில் கலந்து கொண்டு
2 தங்கப்பதக்கங்கள்,5 வெள்ளி பதக்கங்கள் ,2 வெண்கலப்பதக்கங்கள்  பெற்ற எம் மாணவர்களை வாழ்த்துகிறோம்... நன்றி பாரதிராஜா சார் ...

புதன், 11 மார்ச், 2020

மாணவர் சேர்க்கை &கொரானா வைரஸ் குறித்தவிழிப்புணர்வு கூட்டம்

2020-21 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் இன்று நம் இந்துநடு நிலைப்பள்ளியின் ஹரி நாராயணன் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமைவகித்தார் . தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது. பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மாற்றும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் எடுத்துரைத்தார். கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு அளிக்கப்பட்டது . பட்டதாரி ஆசிரியை திருமதி. சு.முத்துசெல்வி நன்றி உரையாற்றினார் . கூட்டம் முடிந்த பின் பெற்றோர்கள் அனைவரும் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று வசதிகளைப் பார்வையிட்டனர் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி.அமுதவல்லி,திருமதி.ஜேஸ்மாலா,திருமதி.கோமதி,செல்வி.துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.