பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

வனத்துறையின் மத்திய நாற்றங்கால் தட்டப்பாறை பண்ணைக்குமாணவர்களின் களப்பயணம்

வனத்துறையின் மத்திய நாற்றங்கால்  தட்டப்பாறை   பண்ணைக்குமாணவர்களின் களப்பயணம் 

 

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள்   களப்பயணமாக  இன்று  வீரவநல்லூர் புறவழிச்சாலையில்  வெள்ளங்குளி அருகில் அமைந்துள்ள தமிழக வனத்துறையின் மத்திய நாற்றங்கால்  தட்டப்பாறை   பண்ணைக்கு சென்றனர். மாணவர்களை வனச்சரகர் திரு. குணசீலன் அவர்களின் தலைமையிலான அலுவலர்கள் வரவேற்றனர். வனச்சரகர் திரு. குணசீலன் அவர்கள் மாணவர்களிடம் மரங்கள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார் . மேலும் மாணவர்களுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து மரங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் , எவ்வாறு மரச்செடிகளை வளர்ப்பது குறித்தும் எடுத்துக்கூறினார். மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் கேட்டு வந்தனர். மேலும் தங்களின்  சந்தேகங்களைக்கேட்டு தெளிவுபெற்றனர் .கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தேனீர் மற்றும் இனிப்புகளை வனத்துறையினர் வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்