பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ROTARY INTERACT CLUB-முப்பெரும் விழா


நமது அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் சார்பில் ROTARY INTERACT CLUB ஆரம்ப விழா , உலக எழுத்தறிவு தின விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு. ம . ராம் சந்தர் வரவேற்புரை ஆற்றினார் .விழாவிற்கு ரோட்டரி வேணுவனம் தலைவர் திரு.R. பாலாஜி  தலைமை வகித்தார். செயலர் திரு. S.வெங்கடேஷ்  முன்னிலை வகித்தார். முன்னாள் செயலர் திரு. கோமதிசங்கர்   சிறப்புரை ஆற்றினார்கள் .ROTARY INTERACT CLUB தலைவராக செல்வி. முத்தரசி  , செயலராக வனிதா  , பொருளாளராக  இசக்கிமுத்து  ஆகியோருக்கு வேணுவனம் தலைவர் திரு.R. பாலாஜி  பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற மாணாக்கர்களுக்கு வில்லைகள் அணிவிக்கப்பட்டது.மாணாக்கர்களுக்கு வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள்  வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியை திருமதி முத்து செல்வி நன்றி கூறினார். நாட்டுப் பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி,திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.




















புதன், 9 ஆகஸ்ட், 2017

பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் இன்று (09.08.2017) காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக்  கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் திரு.ராம் சந்தர்  தலைமைதாங்கினார். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி வரவேற்புரை  ஆற்றினார். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்தும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  மேலும் சுகாதாரம் குறித்தும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராக அரிகேசவநல்லூர் இருக்க வேண்டும் என்ற தீரமானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பெற்றோரிடம் பள்ளியின் சிறப்புகளான சுகாதாரமான பள்ளிவளாகம், இருக்கை வசதிகள், அழகான தெளிவான தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப்பயிற்சி , ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான வகுப்பறை  , மாணவர் மன்ற செயல்பாடுகள் , பள்ளி வளாகம்  முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி , கணினி வழி கல்வி , சுகாதாரமான குடிநீர் வசதி  முதலான சிறப்புகள் குறித்து  பெற்றோர்களிடம்  எடுத்துக் கூறப்பட்டது. ஆசிரியர் திருமதி.ஜேஸ் மாலா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி. திருமதி. மணிமேகலை , செல்வி.                    இ ன்பரசி  ஆகியோர் செய்திருந்தனர். 

வெள்ளி, 23 ஜூன், 2017

நன்றி...நன்றி...

நம் மாணவர்களின் வாசித்தல் திறன் மற்றும் பொது அறிவுத்திறனை மேம்படுத்த ஏதுவாக  தி இந்து தமிழ் நாளிதழினை தொடர்ந்து நம் பள்ளிக்கு வழங்கி வரும் அம்பாசமுத்திரம் தொழிலாளர் உதவி ஆய்வாளரும் நெருங்கிய நண்பருமான திரு. பா .சபரீசன்  B .E ., அவர்களுக்கு நம் பள்ளி நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



திங்கள், 22 மே, 2017

பாராட்டுகிறோம்.....

நமது பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்று வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு   பொதுத்தேர்வில் 473/500 மதிப்பெண்கள் பெற்ற எம் மாணவன் செல்வன். முருகேசன், 455/500 மதிப்பெண்கள் பெற்ற செல்வி. வீரலட்சுமி, முக்கூடல் சொக்கலால்  மேல்நிலைப்பள்ளியில் பயின்று  430/500 மதிப்பெண்கள் பெற்ற செல்வன். சந்தனமாரி ஆகியோரை பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பில்பாராட்டுகிறோம்.



செவ்வாய், 18 ஏப்ரல், 2017

திரு நெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றி

சிறந்த சமூகசேவை செய்த மாணாக்கர்களுக்கானவிருது மற்றும் சான்றிதழ்களை எம் பள்ளி மாணாக்கர்கள் செல்வி.முப்பிடாதி மற்றும் செல்வன்.சுபாஷ் சுப்பிரமணியனுக்கு வழங்கிய திரு நெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Image may contain: 7 people, people standing and suitImage may contain: 8 people, people standing and suitImage may contain: 8 people, people standing and suitNo automatic alt text available.

No automatic alt text available.

வியாழன், 13 ஏப்ரல், 2017

சாதனையாளருடன் கலந்துரையாடல்

தனது பள்ளிப்படிப்பினை அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று இன்று மேலைநாட்டில் மூன்று முதுகலை பட்டத்தினை நிறைவு செய்து பல மொழிகளைப் பயின்று உலகில் 35 நாடுகளில் பணிபுரிந்து தற்போது நிதியியல் மேலாளராகப் பணிபுரிந்து வரும் அருமை தம்பி திரு. விஜய் ராஜேந்திரன் அவர்கள் நம் பள்ளிக்கு வருகைபுரிந்து தான் உலக நாடுகளில் பெற்ற அனுபவம், மொழியின் அவசியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி , கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். எமது அழைப்பை மறுக்காமல் ஏற்று பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் உரையாடிய திரு. விஜய் ராஜேந்திரன் அவர்களுக்கு நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


Image may contain: 1 personImage may contain: 2 people, people standing
Image may contain: 2 peopleImage may contain: 1 person
Image may contain: 5 people, people sitting and indoor

சனி, 18 மார்ச், 2017

முப்பெரும் விழா

17.03.2017 நம்  முப்பெரும் விழா  மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு. டி.வி. சுப்பி ர மணியன்  அவர்கள்  தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. இரா.மணி முன்னிலைவகித்தார். வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு .இப்ராஹிம் அவர்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்தார்கள் . திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்களின் தகப்பனாரும் ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் நிரந்தர விளையாட்டு மேடையினைத் திறந்து திறந்து வைத்தார்கள்.    பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர், சேரன்மகாதேவி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி  .மாரியம்மாள் தமிழ்செல்வி ,வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு .இப்ராஹிம் அவர்களின் துணைவியார், எம் பள்ளி செயலரின் சகோதரர் திரு. சேகர் ஆகியோர்  குத்து விளக்கு ஏற்றினார்கள். இடைநிலை ஆசிரியர் திருமதி ஜேஸ் மாலா வரவேற்புரையாற்றினார்.  தலைமை ஆசிரியர் திரு. ராம் சந்தர்  ஆண்டறிக்கை வாசித்தார். வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு .இப்ராஹிம் அவர்கள்,திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்,பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர், சேரன்மகாதேவி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி  .மாரியம்மாள் தமிழ்செல்விஅவர்கள் ,. அம்பாசமுத்திரம் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் திரு. முருகேசன்பிள்ளை, திரு. சவரீசன் ,






































திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. சுவாமிநாதன், துணைத்தலைவர் திரு. சுபாசங்கர், செயலாளர் திரு. கோமதிசங்கர், உறுப்பினர் திரு . மாரியப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி நன்றியுரை கூறினார்.  வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின்  உறுப்பினர்கள் திரு. முஹம்மது அலி ஜின்னா, திரு. ராமகிருஷ்ணன், திரு திப்பு சுல்தான்  மற்றும் திரு. மனோகரன், திரு. பாலமுரளி, திரு. வரதராஜன், திரு. ஐயப்பன், வீரவநல்லூர் திரு. சந்தோஷ் ஐயப்பன்  பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாகக்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசிரியை திருமதி. மணிமேகலை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை திருமதி. அமுதவல்லி, செல்வி.இன்பரசி , ஓவிய ஆசிரியர் திரு. துரை, சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.