பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 31 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14


மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

 

 

 

பொன்மொழி 

துவண்டு விடாதீர்கள்  முயன்று கொண்டே இருங்கள் .. தோல்வியிடம் உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்

 

 

 

 

 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com 

 

ஞாயிறு, 29 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74

 

அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும். 

 

பொன்மொழி 

எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் .. நமது எண்ணம்தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது ..

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com 

சனி, 28 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். 

பொன்மொழி 

விடிகின்ற பொழுதெல்லாம் விடியல் அல்ல .. நீ விழிக்கின்ற பொழுதே விடியல் 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

 

செவ்வாய், 24 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

  

 தினம் ஒரு திருக்குறள் 


 

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?  (
60. ஊக்கமுடைமை-591)

 

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?  

பொன்மொழி 

நீ போகும் பாதையில் தடைகள் எதுவும்   இல்லையென்றால் அது நீ போகும் பாதையே  அல்ல ... அது வேறு யாரோ போன பாதை 


இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

திங்கள், 23 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். 480(வலி அறிதல் )


தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
 
பொன்மொழி 
வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு.. ஒரு நாள் நீயும் வெற்றியாளனே...
 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com
 

 

வெள்ளி, 20 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

 

  வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.471

 

செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும். 

 

பொன்மொழி 

அனைவரும் செல்லும் பாதையில் நீ செல்லாதே.. உனக்கென தனி வழியை உருவாக்கிக்கொள்..


 

 

 

 

 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

 

செவ்வாய், 17 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள் 

 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

 

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

 

பொன்மொழி 

முயற்சி செய்து கொண்டு இரு ..ஒருநாள் தோல்வி தோற்று போகும் முயற்சியிடம் ..

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

 

NHIS - 2021 - விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!


அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2021 - விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

ஞாயிறு, 15 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு  1

 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

பொன்மொழி 

 என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போக மாட்டேன்.  காரணம் நான் நூறு வெற்றிகளைப்பார்த்தவன் அல்ல   ஆயிரம்   தோல்விகளைப்பார்த்தவன் 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com
 
கல்வி பொன்மொழி

 இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்விதான் ..

வளர்ப்போம் பொது அறிவினை.....


 

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் 

ஜி. யூ. போப்  

 

பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் 

நம்பியாண்டார் நம்பி 

 

"சிறுகதை மன்னன்" என்று முதன் முதலில் சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர்

புதுமைப்பித்தன்

 

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

ஹாக்கி

 

சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?

மெலானின்

 

 தினம் ஒரு திருக்குறள் 

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 708

 

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும். 

பொன்மொழி

நீ நடந்துபோக பாதை இல்லையே என்று  கவலைப்படாதே... நீ நடந்தால் அதுவே ஒரு பாதை 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

 

சனி, 14 மே, 2022

சர்விஸ் டு சொசைட்டி ரவி சொக்கலிங்கம் அவர்களின் தன்னம்பிக்கை உரை...

 அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் 2021-22ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு  முடித்து 9 ம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களிடம்  காணொளிக்காட்சி மூலம் சர்விஸ் டு சொசைட்டி ரவி சொக்கலிங்கம் அவர்கள்  தன்னம்பிக்கை உரையாற்றினார்கள் . தானும் அரசுப்பள்ளியில் பயின்று உயர்த்த இடத்தினை அடைந்த தன் வாழ்க்கையனுபவத்தினை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு மிகவும் அழகாக மாணவர்களுக்குப்புரியும் வண்ணம் பதிலளித்தார்கள் .




 

2021-22 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா

 2021-22ம் கல்வியாண்டில்  பயின்ற   எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா  13.05.2022 அன்று  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின்  ஹரிநாராயணன் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.  விழாவில் பள்ளி செயலர்  திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் . நினைவுப்பரிசினை  பொறியாளரும் சர்வீஸ்  டு சொசைட்டி நிறுவனருமான ரவிசொக்கலிங்கம் அவர்களும் பள்ளிநிர்வாகமும் இணைந்து  மாணவர்களுக்கு வழங்கினார்கள் . விழாவில் தலைமையாசிரியர் ராம் சந்தர் ,ஆசிரியர்கள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. அமுதவல்லி,திருமதி.ஜேஸ் மாலா ,திருமதி.முருகதாய்,திருமதி.கோமதி,திருமதி.ஜெயலட்சுமி,திருமதி.சண்முகத்தில்லை ,திருமதி.மணிமேகலை ,திருமதி.ப்ரேம்கலா ,செல்வி.முத்துலெட்சுமி , டேக் வாண்டே  மற்றும் வில்வித்தைப் பயிற்சியாளர் திரு.பாரதிராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசினர் .எட்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். விழாவில் தினம் ஒரு திருக்குறளினைத் தினமும் வழங்கும் ஆசிரியர் செல்வி. முத்துலெட்சுமிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 



 






































புதன், 11 மே, 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 


 

 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண். 574

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

 பொன்மொழி 

ஒன்றை உன்னால் கனவு காண முடியுமாயின் அதனை  உன்னால்  செய்யவும் முடியும் 


இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com 

 குரல் 

மு.முத்து லெட்சுமி 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர்

இந்து நடுநிலைப்பள்ளி 2021-22 மாணவர்கள் குழுப்புகைப்படம்

இந்து நடுநிலைப்பள்ளி 2021-22 மாணவர்கள் குழுப்புகைப்படம் 


                                                                 ஒன்றாம் வகுப்பு


இரண்டாம் வகுப்பு 

                                                                மூன்றாம் வகுப்பு 


                                                                நான்காம் வகுப்பு 

                                                                   ஐந்தாம் வகுப்பு 


                                                              

                                                                     ஆறாம் வகுப்பு 


                                                                  ஏழாம் வகுப்பு 


                                                                  எட்டாம் வகுப்பு


                                                   செயலர் மற்றும் ஆசிரியர்கள்