பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 28 அக்டோபர், 2019

"ஹரிநாராயணன் " திறப்பு விழா

நம் பள்ளியின் புதிய கட்டிடமான "ஹரிநாராயணன் " திறப்பு விழா ,95 வது ஆண்டு விழா மற்றும் நூலக அறை  திறப்புவிழா  ஆகியன மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் தலைமை வகித்தார்கள். நம் பள்ளியின்  செயலர் திரு. டீ.வி. சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தரைத்தளத்தினை  திரு.Dr.ராமசுப்பிரமணியன் அவர்களும் அன்னாரின் சகோதரர் திரு. Dr.அமீர்ஜான் அவர்களும் இணைந்து திறந்து வைத்தார்கள். முதல் தளத்தினை அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.M.H.M. இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள் . நூலக அறையினை பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் திறந்து வைத்தார்கள்.  வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திருஎ .சாம்சன் அவர்கள் சிறப்புரை ஆற்றி போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு. S.பிரான்சிஸ் முத்துராஜ் M.A.,M.Ed.,M.Phil.,அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர் .




















திங்கள், 7 அக்டோபர், 2019

ஹரிநாராயணன் கட்டிடத்திறப்பு விழா அழைப்பிதழ்

ஹரிநாராயணன் கட்டிடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்