பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு

 மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு 


 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில்  வைத்து நடைபெற்ற  மாநில அளவிலான  கிளியாந்தட்டு(அட்யா  பட்யா) விளையாட்டுப்போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியில் பங்குபெற்ற  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணாக்கர்கள்  இசக்கிமுகேஷ் ,மீனாட்சி,சுபஸ்ரீ  ஆகியோருக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனை தலைமை மருத்துவர்  டாக்டர்.டேனியல் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள் 








சிறந்த கல்விச்சேவைக்கு S2S ன் கருணாவிருது

 சிறந்த கல்விச்சேவைக்கு S2S ன் கருணாவிருது

 

தனது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தினை நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு நன்கொடை மற்றும் எல் இ டி  தொலைகாட்சி மற்றும்  ஆண்டிராய்டு ப்ரொஜெக்டர்  வழங்கிய  திரு.சரவணன் பட்டர்  மற்றும் நம் பள்ளியின் ஒவ்வொரு நிகழ்வையும் தமது கேமரா கண்களால்  ஒளி ஓவியமாக்கித்தரும்  வீரவநல்லூர் எஸ்.வி.ராஜா ஸ்டுடியோ  திரு. வரதராஜன்  அவர்களுக்கும் சர்விஸ் டூ  சொசைட்டி நிறுவனர்  திரு.ரவிசொக்கலிங்கம் அவர்கள்  கல்விச்சேவையைப்பாராட்டி கருணா விருது வழங்கி கௌரவித்தார்கள் . விருதினை  வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனை தலைமை மருத்துவர்  டாக்டர். டேனியல் அவர்கள் விருது வழங்கினார்கள் .

சர்விஸ் டூ  சொசைட்டி நிறுவனர்  திரு.ரவிசொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம் 





77 வது சுதந்திர தின விழா