பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 14 ஜூலை, 2018

கல்விச்சேவை = சகோதரர் திரு. இப்ராஹிம்








ஒவ்வொரு மனிதரும் முன்மாதிரியாய் எடுத்துக்கொள்ளும் தகுதி படைத்த மாமனிதர் அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் அன்பு சகோதரர் திரு. இப்ராஹிம் அவர்கள். மனிதத்தை போதிப்பவர்... நம் பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியைக்கண்டு தாயன்போடு மகிழ்பவர். பிறருக்கு உதவி செய்வதையே குறிப்பாக கல்விச்சேவை செய்வதையே இறைவனுக்கு செய்யும் சேவையாகக் கருதுபவர்..நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பள்ளிகளின் டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் அன்னார் வழங்கியதாகத்தான் இருக்கும் ..சகோதரரைப்பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
அன்னார் இன்று தம் மனைவியுடன் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்தார் . பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களிடையே உரையாற்றி புத்தகத்தை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் ,உதவும் மனப்பான்மை,தமக்கு தீங்கு செய்தோரை மன்னித்தல் ,உண்மை பேசுதல் ,மாணவர்களின் எதிர்கால கனவு குறித்த கேள்விகள் எழுப்பி சிறப்பாக பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் ,பதக்கங்கள் மற்றும் ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினார் ..அவரது துணைவியாரும் மகிழ்வுடன் மாணவர்களுக்கு பரிசு அளித்தது மகிழ்ச்சி கொள்ளச்செய்தது .தாம் செய்த உதவி அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் தனது உழைப்பில் 33% பிறருக்கு உதவும் வகையில் கொடுக்கும் மனம் படைத்த சுயநலமில்லா அன்பிற்குரியவரை பள்ளித்தலைமையாசிரியர் சார்பாகவும் ,ஊர் மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .