பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 24 ஏப்ரல், 2023

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளிக்கு கல்விக்கோயில் விருது

 கல்விக்கோயில் விருது 

நல்லோர் வட்டம் சார்பில் சிறந்த 25 பள்ளிகளுக்கு கல்விக்கோயில்விருது வழங்கும் விழா சென்னை  தியாகராஜ நகர்  சர்  பி.டி .தியாகராஜர் கலையரங்கில் வைத்து நடைபெற்றது.  விழாவிற்கு AVM  லிமிட்டெட் திரு. வேலு ஏகநாதன் அவர்கள் தலைமைவகித்தார். தொழிலதிபர் திரு.ரவி முருகையா அவர்கள் சிறப்புரையாற்றினார். திரைப்பட இசையமைப்பாளர் திரு தாஜ் நூர் , சிவகாசி R .V . பொறியியல் கல்லூரி தாளாளர் திருமதி பிருந்தா ராகவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .சுற்றுப்புறத்தூய்மை ,ரம்யமான சூழல், மாணவர்களின் உயர்விற்கான சிறப்பு செயல்பாடுகள், ஒருங்கிணைந்து செயல்படும் ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்குழுவின் திட்டமிட்ட செயல், பள்ளி வளர்ச்சிக்கான இலக்கு, வசதியான கழிப்பறை , நாட்டுப்பற்று, பெற்றோர்கள் பங்களிப்பு ,, முன்னாள் மாணவர்கள் சமூக அக்கறையாளர்களின் பங்கு  ஆகியவற்றுடன்  சிறப்பாக செயல்படும் 25 பள்ளிகளுக்கு  கல்விக்கோயில் விருது வழங்கப்பட்டது.  நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளிக்குக் கிடைத்த கல்விக்கோயில் விருது  மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசினை பள்ளி தலைமையாசிரியர் ராம் சந்தர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர். விழாவினை  நல்லார்வட்டம்  கல்விக்கோயில் துறைப்பொறுப்பாளர்  செல்வி.N .ஜெயலெட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்பாகச் செய்திருந்தனர் .

இவ்விருதினை எம் பள்ளிக்கு வழங்கி எங்களை உற்சாகப்படுத்தி,அடுத்தகட்ட நகர்விற்கு காரணமாக அமைந்த நல்லோர் வட்டத்திற்கு  அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது.