பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 19 நவம்பர், 2022

 உலக கழிப்பறை தினம்

 உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு இன்று அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் தூய்மைநடைப்பயணம்  உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அரிகேசவநல்லூர்  ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் தலைமைவகித்தார்.தலைமையாசிரியர் திரு. ம.ராம் சந்தர்  வரவேற்புரையாற்றி, மாணவர்களிடையே திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற  நிலையினை தக்க வைத்தல் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார் . ஆசிரியை திருமதி.செ .ஜேஸ் மாலா  அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி கூறினர் . நிகழ்வில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அரிகேசவநல்லூர் ஊராட்சி செயலர் திரு.புதியவன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பின்பு ஊராட்சி பகுதியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.