பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 20 நவம்பர், 2023

போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு  

வீரவநல்லூர் காவல்துறையின் சார்பில் போதைப்பழக்கத்திற்கு   எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் காவல் சார்பு ஆய்வாளர்  திரு.காவுராஜன் அவர்கள் தலைமைவகித்து, போதைப்பழக்கத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்து விளக்கினார். மேலும் போக்குவரத்து விதிகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார் .









திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

https://www.dailythanthi.com/News/State/awareness-program-against-drug-addiction-1007800
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

https://www.dailythanthi.com/News/State/awareness-program-against-drug-addiction-1007800

வியாழன், 26 அக்டோபர், 2023

PAGARIYA WELFARE FOUNDATION

நம் அரிகேசவநல்லூர் இந்துநடுநிலைப்பள்ளிக்கு  18 செட் டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை வழங்கிய UNWIREDLABS மற்றும்  PAGARIYA  WELFARE  FOUNDATION  அவர்களுக்கும்  ஏற்பாடு செய்த Sampoornashaa ற்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம் 





 


On behalf of the school management, we express our sincere gratitude to UNWIREDLABS and PAGARIA WELFARE FOUNDATION for providing 18 sets of desks and benches to our Arikesavanallur Hindu Middle School.

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

வனத்துறையின் மத்திய நாற்றங்கால் தட்டப்பாறை பண்ணைக்குமாணவர்களின் களப்பயணம்

வனத்துறையின் மத்திய நாற்றங்கால்  தட்டப்பாறை   பண்ணைக்குமாணவர்களின் களப்பயணம் 

 

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள்   களப்பயணமாக  இன்று  வீரவநல்லூர் புறவழிச்சாலையில்  வெள்ளங்குளி அருகில் அமைந்துள்ள தமிழக வனத்துறையின் மத்திய நாற்றங்கால்  தட்டப்பாறை   பண்ணைக்கு சென்றனர். மாணவர்களை வனச்சரகர் திரு. குணசீலன் அவர்களின் தலைமையிலான அலுவலர்கள் வரவேற்றனர். வனச்சரகர் திரு. குணசீலன் அவர்கள் மாணவர்களிடம் மரங்கள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார் . மேலும் மாணவர்களுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து மரங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் , எவ்வாறு மரச்செடிகளை வளர்ப்பது குறித்தும் எடுத்துக்கூறினார். மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் கேட்டு வந்தனர். மேலும் தங்களின்  சந்தேகங்களைக்கேட்டு தெளிவுபெற்றனர் .கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தேனீர் மற்றும் இனிப்புகளை வனத்துறையினர் வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர் 















சனி, 26 ஆகஸ்ட், 2023

கணிதஆய்வக உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்

நம் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு.சங்கர ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வரும் எம்பள்ளியின் முன்னாள்மாணவருமான கணித ஆசிரியர் திரு.வெங்கட் அவர்கள் கணித ஆய்வகத்திற்குரிய உபகரணங்களை இன்று நம் பள்ளிக்கு வழங்கியுள்ளார்கள்... அன்னாருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



திங்கள், 21 ஆகஸ்ட், 2023

அரிகேசவநல்லூரில் வனத்துறை சார்பாக நட்சத்திரவனம்

அரிகேசவநல்லூரில் வனத்துறை சார்பாக நட்சத்திரவனம் 


 

அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி  திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக நட்சத்திர வனம்  துவக்கவிழா இன்று நடைபெற்றது. விழாவில் வனச்சரகர் திரு.குணசீலன்  பிரபல ஜோதிடர் திரு. அரிகேசநல்லூர்  வெங்கட்ராமன் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள்  நடப்பட்டது. வனச்சரகர் திரு.குணசீலன்  பிரபல ஜோதிடர் திரு. அரிகேசநல்லூர்  வெங்கட்ராமன் ,ஊர்பொதுமக்கள்மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  ஆகியோர்  மரங்கள் நட்டனர் 












 

 

 மேஷம்
மேஷ ராசி - செஞ்சந்தனம் மரம்
அஸ்வினி நட்சத்திரம் - ஈட்டி மரம்
பரணி நட்சத்திரம் - நெல்லி மரம்
கார்த்திகை நட்சத்திரம் (பாதம் 1) - அத்தி மரம்

ரிஷபம்
ரிஷபம் ராசி - அத்தி மரம்
கார்த்திகை நட்சத்திரம் (பாதம் 2,3,4) - அத்தி மரம்
ரோகிணி நட்சத்திரம் - நாவல் மரம்
மிருகசீரிஷம் நட்சத்திரம் (பாதம் 1,2) - கருங்காலி மரம்


மிதுனம்
மிதுனம் ராசி -பலா
மிருகசீரிஷம் நட்சத்திரம் (பாதம் 3,4) - கருங்காலி மரம்
திருவாதிரை நட்சத்திரம் -திப்பிலி மரம்
புனர்பூசம் நட்சத்திரம் (பாதம் 1,2, 3) - மூங்கில் மரம்


கடகம்
கடகம் ராசி - புரசு மரம்
புனர்பூசம் நட்சத்திரம் (பாதம் 4) - மூங்கில் மரம்
பூசம் நட்சத்திரம் - அரசம் மரம்
ஆயில்யம் நட்சத்திரம் - புன்னை மரம்

சிம்மம்
சிம்மம் ராசி - குங்குமப்பூ மரம்
மகம் நட்சத்திரம் - ஆலம் மரம்
பூரம் நட்சத்திரம் - பலா மரம்
உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1) - ஆத்தி மரம்



கன்னி
கன்னி ராசி - மா மரம்
உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2,3,4) - ஆத்தி மரம்
அஸ்தம் நட்சத்திரம் - அத்தி மரம்
சித்திரை நட்சத்திரம் (பாதம் 1,2) -வில்வம் மரம்

துலாம்
துலாம் ராசி - மகிழம் மரம்
சித்திரை நட்சத்திரம் (பாதம் 3,4) - வில்வம் மரம்
சுவாதி நட்சத்திரம் - நீர்மருது மரம்
விசாகம் நட்சத்திரம் (பாதம் 1,2,3) - விளா மரம்


விருச்சிகம்
விருச்சிகம் ராசி - கருங்காலி மரம்
விசாகம் நட்சத்திரம் (பாதம் 4) - விளா மரம்
அனுஷம் நட்சத்திரம் - மகிழம் மரம்
கேட்டை நட்சத்திரம் - பிராய் மரம்


தனுசு
தனுசு ராசி - அரசம் மரம்
மூலம் நட்சத்திரம் - மராமரம் மரம்
பூராடம் நட்சத்திரம் - வஞ்சி மரம்
உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1) - பலா மரம்


மகரம்

மகரம் ராசி - ஈட்டி மரம்
உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2,3,4) - பலா மரம்
திருவோணம்நட்சத்திரம் - எருக்கு மரம்
அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1,2) - வன்னி மரம்


கும்பம்
கும்பம் ராசி - வன்னி மரம்
அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3,4) - வன்னி மரம்
சதயம் நட்சத்திரம் - கடம்பு மரம்
பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1,2,3) - தேமா மரம்

மீனம்
மீனம் ராசி - புன்னை மரம்
பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4) - தேமா மரம்
உத்திரட்டாதி நட்சத்திரம் - வேம்பு மரம்
ரேவதி நட்சத்திரம் - இலுப்பை மரம்

நட்சத்திர மரங்கள்: அஸ்வதி- ஈட்டி மரம், பரணி-நெல்லி மரம், கார்த்திகை-அத்திமரம், ரோகிணி-நாவல்மரம், மிருகசீரிடம்- கருங்காலி மரம், திருவாதிரை-செங்கருங்காலி மரம், இதையும் படியுங்கள்: ஆடி மாதம் கோனியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும்... கிடைக்கும் பலன்களும்... புனர்பூசம்-மூங்கில் மரம், பூசம்- அரசமரம், ஆயில்யம்- புன்னை மரம், மகம்-ஆலமரம், பூரம் -பலா மரம், உத்திரம்-அலரி மரம், அஸ்தம்- அத்தி மரம், சித்திரை- வில்வ மரம், சுவாதி -மருத மரம் , விசாகம்- விலா மரம், அனுஷம்- மகிழ மரம், கேட்டை-பராய் மரம், மூலம்- மராமரம், பூராடம்- வஞ்சி மரம், உத்திராடம்- பலா மரம், திருவோணம்- எருக்க மரம் , அவிட்டம்-வன்னி மரம், சதயம்-கடம்பு மரம், பூரட்டாதி- தேமமரம், உத்திரட்டாதி- வேம்பு மரம், ரேவதி-இலுப்பை மரம்.

https://www.maalaimalar.com/devotional/dosharemedies/koniamman-temple-abhishekam-pariharam-benefits-642707?infinitescroll=1
நட்சத்திர மரங்கள்: அஸ்வதி- ஈட்டி மரம், பரணி-நெல்லி மரம், கார்த்திகை-அத்திமரம், ரோகிணி-நாவல்மரம், மிருகசீரிடம்- கருங்காலி மரம், திருவாதிரை-செங்கருங்காலி மரம், இதையும் படியுங்கள்: ஆடி மாதம் கோனியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும்... கிடைக்கும் பலன்களும்... புனர்பூசம்-மூங்கில் மரம், பூசம்- அரசமரம், ஆயில்யம்- புன்னை மரம், மகம்-ஆலமரம், பூரம் -பலா மரம், உத்திரம்-அலரி மரம், அஸ்தம்- அத்தி மரம், சித்திரை- வில்வ மரம், சுவாதி -மருத மரம் , விசாகம்- விலா மரம், அனுஷம்- மகிழ மரம், கேட்டை-பராய் மரம், மூலம்- மராமரம், பூராடம்- வஞ்சி மரம், உத்திராடம்- பலா மரம், திருவோணம்- எருக்க மரம் , அவிட்டம்-வன்னி மரம், சதயம்-கடம்பு மரம், பூரட்டாதி- தேமமரம், உத்திரட்டாதி- வேம்பு மரம், ரேவதி-இலுப்பை மரம்.

https://www.maalaimalar.com/devotional/dosharemedies/koniamman-temple-abhishekam-pariharam-benefits-642707?infinitescroll=1

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு

 மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு 


 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில்  வைத்து நடைபெற்ற  மாநில அளவிலான  கிளியாந்தட்டு(அட்யா  பட்யா) விளையாட்டுப்போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியில் பங்குபெற்ற  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணாக்கர்கள்  இசக்கிமுகேஷ் ,மீனாட்சி,சுபஸ்ரீ  ஆகியோருக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனை தலைமை மருத்துவர்  டாக்டர்.டேனியல் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள் 








சிறந்த கல்விச்சேவைக்கு S2S ன் கருணாவிருது

 சிறந்த கல்விச்சேவைக்கு S2S ன் கருணாவிருது

 

தனது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தினை நம் பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு நன்கொடை மற்றும் எல் இ டி  தொலைகாட்சி மற்றும்  ஆண்டிராய்டு ப்ரொஜெக்டர்  வழங்கிய  திரு.சரவணன் பட்டர்  மற்றும் நம் பள்ளியின் ஒவ்வொரு நிகழ்வையும் தமது கேமரா கண்களால்  ஒளி ஓவியமாக்கித்தரும்  வீரவநல்லூர் எஸ்.வி.ராஜா ஸ்டுடியோ  திரு. வரதராஜன்  அவர்களுக்கும் சர்விஸ் டூ  சொசைட்டி நிறுவனர்  திரு.ரவிசொக்கலிங்கம் அவர்கள்  கல்விச்சேவையைப்பாராட்டி கருணா விருது வழங்கி கௌரவித்தார்கள் . விருதினை  வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனை தலைமை மருத்துவர்  டாக்டர். டேனியல் அவர்கள் விருது வழங்கினார்கள் .

சர்விஸ் டூ  சொசைட்டி நிறுவனர்  திரு.ரவிசொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம் 





77 வது சுதந்திர தின விழா