பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 30 நவம்பர், 2019

SUCCESS STORIES OF INNOVATIVE TEACHING -Secrets behind a Decade of Success

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை(Pandit Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching(an  MHRD Project, Govt.of India)) நடத்தும் A Two Day Symposium on SUCCESS STORIES OF INNOVATIVE TEACHING நிகழ்வில் Secrets behind a Decade of Success என்னும் தலைப்பில் உரையாற்ற வாய்ப்பளித்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும் , கல்வியியல் துறை தலைவர் முனைவர்.வில்லியம் தர்மராஜ் அய்யா அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
                         2010 முதல் 2019 வரை பள்ளியின் வளர்ச்சியினை இந்த நிகழ்வு வெளிக்கொண்டு வந்துள்ளது. பள்ளியின் உட்கட்டமைப்பு முதல் மாணவர் முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து உரையாற்ற பெரும் வாய்ப்பாக அமைந்தது. நம் பள்ளியின் செயல்பாடுகளும் வெளிக்கொண்டு வர ஒரு மிகப்பெரிய மேடை கிடைத்தது. தோராயமாக ரூபாய்  முப்பத்து ஐந்து லட்சம்  மதிப்பிலான உதவிகள் நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்,பெரியோர்கள் மற்றும் முகநூல் நண்பர்களுக்கு நன்றி சொல்ல இந்த மேடை உதவியாக அமைந்தது.
               எம் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரவும் இந்த நிகழ்வு பேருதவி புரிந்தது.
                ஒரு தலைமை  எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனையும், தனது துறையை எந்த அளவு நேசித்து வளர்ச்சிப்பாதையில்  கொண்டு செல்லும் மிகப்பெரிய ஆளுமையான கல்வியியல் துறை தலைவர் முனைவர்.வில்லியம் தர்மராஜ் அய்யா அவர்களின் அறிமுகம் இந்த நிகழ்வில் எங்களுக்கு கிடைத்தது.
       இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி அளித்த எம்பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சு. கல்யாணி அவர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்