தினம் ஒரு திருக்குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது
இன்றைய பொன்மொழி
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்.
அறிவியல் துளிகள்
மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. மின்னலில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தளவு வெப்பம் கொண்ட மின்னல், மரத்தின் மீது பாயும் போது, மரத்தின் உட்பகுதியில் உள்ள நீர் முதலான பொருட்கள் ஆவியாகி விரிவடைந்து வெடிப்பது போன்ற வினை ஏற்படும். மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
பொது அறிவு
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
பழமொழி
அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.