பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

அறிவியல் கொண்டாட்டம்











தொடக்கக் கல்வி துறையின் அறிவியல் கொண்டாட்டம் முகாம் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது . நிகழ்ச்சியினை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. பி. மேரி சொருப ராணி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் திரு. இசக்கியப்பன் திருமதி. வல்சாலா மற்றும் திருமதி. புனிதவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைகளை செய்து காட்டினர் . மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். மாணவர்கள் கேட்ட கேள்விகளில் சில அணு உலயினால் என்ன நன்மை? அதற்க்கு ஏன் இவ்வளவு நாள் கழித்து எதிர்ப்பு? பயம் என்றால் என்ன? ரத்தத்தைஎப்படி வகையாக பிரிக்கிறார்கள்? முடிக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் ? இது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்குரிய பதில்களை தெரிந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் ராமலக்ஷ்மி , மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.