பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 18 மார்ச், 2017

முப்பெரும் விழா

17.03.2017 நம்  முப்பெரும் விழா  மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு. டி.வி. சுப்பி ர மணியன்  அவர்கள்  தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. இரா.மணி முன்னிலைவகித்தார். வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு .இப்ராஹிம் அவர்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்தார்கள் . திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்களின் தகப்பனாரும் ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் நிரந்தர விளையாட்டு மேடையினைத் திறந்து திறந்து வைத்தார்கள்.    பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர், சேரன்மகாதேவி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி  .மாரியம்மாள் தமிழ்செல்வி ,வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு .இப்ராஹிம் அவர்களின் துணைவியார், எம் பள்ளி செயலரின் சகோதரர் திரு. சேகர் ஆகியோர்  குத்து விளக்கு ஏற்றினார்கள். இடைநிலை ஆசிரியர் திருமதி ஜேஸ் மாலா வரவேற்புரையாற்றினார்.  தலைமை ஆசிரியர் திரு. ராம் சந்தர்  ஆண்டறிக்கை வாசித்தார். வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு .இப்ராஹிம் அவர்கள்,திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்,பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர், சேரன்மகாதேவி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி  .மாரியம்மாள் தமிழ்செல்விஅவர்கள் ,. அம்பாசமுத்திரம் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் திரு. முருகேசன்பிள்ளை, திரு. சவரீசன் ,






































திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. சுவாமிநாதன், துணைத்தலைவர் திரு. சுபாசங்கர், செயலாளர் திரு. கோமதிசங்கர், உறுப்பினர் திரு . மாரியப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி நன்றியுரை கூறினார்.  வீரவநல்லூர் அல் பா முஹம்மது உசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின்  உறுப்பினர்கள் திரு. முஹம்மது அலி ஜின்னா, திரு. ராமகிருஷ்ணன், திரு திப்பு சுல்தான்  மற்றும் திரு. மனோகரன், திரு. பாலமுரளி, திரு. வரதராஜன், திரு. ஐயப்பன், வீரவநல்லூர் திரு. சந்தோஷ் ஐயப்பன்  பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாகக்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசிரியை திருமதி. மணிமேகலை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை திருமதி. அமுதவல்லி, செல்வி.இன்பரசி , ஓவிய ஆசிரியர் திரு. துரை, சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.