பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 29 நவம்பர், 2016

2016-  எமக்குக்  கிடைத்த  வரங்கள்- ரோ ட்டரிக் கிளப்  திருநெல்வேலி வேணுவனம் 


           ரோட்டரி வேணுவனம்மாவட்ட துணை ஆளுநர் திரு. ராயல் சுப்பிரமணியன்  தலைவர் திரு.. சிவசுப்பிரமணியன் செயலர் திரு. கோமதி சங்கர் . பொருளாளர் திரு. முத்து , துணை தலைவர் திரு. சுபா சங்கர் , மூத்த உறுப்பினர் திரு. பாக்கியம் , ரோட்டரி முன்னாள் செயலரும் விளாகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. நடராஜன்  ஆகியோர்  நம்  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் தரமான சில்வர் தட்டுகள் வழங்கியுள்ளனர். மேலும் வேணுவனம் ரோட்டரி கிளப் சார்பில் ROTARY INTERACT CLUB  ஆரம்பித்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. வேணுவனம் ரோட்டரி கிளப் இறைவன் எமக்கு அளித்த வரமாவர் .







2016-  எமக்குக்  கிடைத்த  வரங்கள் - அல்ஃபா முஹம்மது ஹுசைன் தொண்டு நிறுவனம் -திரு. இப்ராகிம் அவர்கள்


          

                      வீரவ நல்லுர் அல்ஃபா டெக்ஸ் மற்றும் அல்ஃபா அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழாவில் , தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எங்களது அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் மதிப்பிற்குரிய வி.விஷ்ணு இ.ஆ.ப.,அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.  முதன் முதலாக I.A.S. அதிகாரியின்  பொற்கரங்களால் எம் மாணவர்களுக்கு  பரிசுகள் பெற வைத்த  ஐயா திரு. இப்ராஹிம் அவர்களுக்கு இச் சமயத்தில் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம். 
          மேலும் நம் மாணவர்களுக்கு  கல்வி பயில புதிய கணிப்பொறி ஒன்றினை அளித்த்துள்ளார்கள் . மாணவரிகளுக்கு இணையம் வாயிலாக பாடம் நடத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 
ஐயா திரு. இப்ராஹிம் அவர்கள் இறைவன் எமக்கு அளித்த வரமாவர். 






2016- எமக்குக் கிடைத்த வரங்கள்

2016-  எமக்குக்  கிடைத்த  வரங்கள் - ஐயா .திரு. கணபதி  சுப்பிரமணியன்  அவர்கள் 
 நம்   பள்ளிக்கு  8 செட்  டெஸ்க்  பெஞ்சுகள் ,  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கியுள்ளார்கள்   மற்றும்   இரு





ஆசிரியர்களுக்கு  மாத  ஊதியம்  அளித்து வருகிறார்கள் . அன்னாரின் தந்தையார் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்   முதலிடம் பெற்ற அனைத்து வகுப்பு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளார்கள்.  ஐயா .திரு. கணபதி  சுப்பிரமணியன்  அவர்கள்  தனது குடும்பத்தினருடன் நம் பள்ளிக்கு வருகை தந்து நம் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்கள் .இன்னும் என்ன உதவி வேண்டும் என்றாலும்  செய்யத் தயாராக இருக்கும்  ஐயா .திரு. கணபதி  சுப்பிரமணியன்  அவர்கள் இறைவன் எமக்கு அளித்த வரமாவர்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

"INDIAN CONSTITUTION DAY" முன்னிட்டு 26.11.2016 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளில் உறுதிமொழி மற்றும் போட்டிகள் நடத்த வேண்டும் - மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதா அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்


CRC-யில் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியில் செல்ல நேரிட்டால் மேற்பார்வையாளர் (பொ ) அவர்களிடம் அனுமதி கடிதம் கொடுத்து இயக்க பதிவேட்டில் பதிந்து அனுமதி அளிக்கலாம் மற்றும் தாமதமாக வந்தால் தாமத பதிவேடு பராமரிக்க வேண்டும்..


வியாழன், 24 நவம்பர், 2016

PARTNERSHIP PROGRAMME 6 TH DAY(MATHS)

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தின  ஆறாம் நாளான இன்று கணித வகுப்பு  நடைபெற்றது.வருகை தந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் திரு.ம. ராம்சந்தர் வரவேற்றார். முதல் நிகழ்வாக யோகாப் பயிற்சி அளிக்கப்பட்டது. பின் கணித வகுப்பினை  திருமதி. முத்துச்செல்வி அவர்கள் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தினார்கள். மாணவிகளுக்கு நேப்பியர் முறை, வரைபடம் வரைதல் கற்றுக்கொடுக்கட்டப்பட்டது. மதியம் கலை நிகழ்ச்சிகள் , கணித புதிர் விளையாட்டுகள், வினாடி  வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப்  வழங்கப்பட்டது . பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு . சந்திர சேகர் அவர்கள் பார்வையிட்டு இரு பள்ளியைச் சேர்ந்த மாணாக்கர்களுடன்  கலந்துரையாடினார். A.V.R.M.V. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள்  திருமதி. கல்பனா , திருமதி. கிரேஸ் ஹெலன் ரூபி , இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. முத்து செல்வி , திருமதி. ஜேஷ் மாலா மற்றும் நம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.மணிமேகலை, செல்வி.இன்பரசி ஆகியோரின் ஒத்துழைப்பினால்  இன்றைய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.











www.hindumiddleschool.blogspot.com

வியாழன், 10 நவம்பர், 2016

PARTNERSHIP PROGRAMME 4th day

பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தில் இன்று அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை  திட்ட பொறுப்பாசிரியர்கள்  திருமதி. சங்கரி, திரு.ஹரிகிருஷ்ணன்  ஆகியோர் அழைத்து  வந்தனர். ஆங்கிலப் பாடத்தினை திருமதி. மணிமேகலை  அவர்கள்   காணொலிக் காட்சியுடன் மிகச் சிறப்பாக நடத்தினார்கள். மாணவிகளுக்கு  வங்கிச் செலுத்து சீட்டு பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கப் பட்டது.  மதிய உணவு இடைவேளைக்குப் பின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. களப்பயணமாக  வீரவநல்லூர் அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கத்  தலைமை அலுவலகத்திற்கு  அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு பத்தி , சோப்பு, பட்டு சேலை,சட்டைகள், பஞ்சு மெத்தைகள் மற்றும் கட்டில்கள் செய்வதை நேரடியாகப்; பார்த்தனர். பின் அனைத்து மாணவிகளுக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட்  அளித்தனர். அனுமதி வழங்கிய அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கசெயலர் திரு. ராமகிருஷ்ணன்  அவர்களுக்கும், திரு. காமாட்சி சுந்தரம் அவர்களுக்கும்  மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தினை  சிறப்பாக  நடத்த  ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திர சேகர்  அவர்களுக்கும், அனைவருக்கும் கல்வித்திட்ட   மேற்பார்வையாளர் திருமதி.. சோபியா மெர்சி ஆக்னஸ் அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். திட்டத்தை  எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. அமுதவல்லி, திருமதி ஜேஷ் மாலா ,திருமதி மணிமேகலை,செல்வி இன்பரசி ஆகியோர்  சிறப்பாக நடத்தினார்கள்.

ம.ராம் சந்தர்











தலைமையாசிரியர் 

வெள்ளி, 4 நவம்பர், 2016

PARTNERSHIP PROGRAMME 3rd DAY

பள்ளிப்பரிமாற்றுத்  திட்டத்தின்  மூன்றாம் நாளில் நம் மாணவிகள் அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மேல் நிலைப்பள்ளிக்கு  சென்றனர் .  ஆங்கிலப்  பட்டதாரி ஆசிரியர் திரு. ஹரிகிருஷ்ணன்  அவர்கள்   ICT தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு    புரியும் வகையில் பாடம் நடத்தினார்கள். அன்னாருக்கு நம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . ஓவிய ஆசிரியர் திரு. ரமேஷ் சந்திரா அவர்களி ன்  ஓவியத்திறமை ஆசிரியர்கள்  மற்றும் மாணவிகளை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஓவிய ஆசிரியை திருமதி. டெல்பின்  அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.களப்பயணமாக  வாகைக்குளம் பித்தளை உற்பத்தி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலாளர் திரு. தனபால் அவர்கள் விளக்கு உற்பத்தி செய்தலை  விளக்கினார்கள்.  திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. சங்கரி மற்றும் அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஹேம  லதா   ஆகியோருக்கு நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம்