பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 19 நவம்பர், 2022

 உலக கழிப்பறை தினம்

 உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு இன்று அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் தூய்மைநடைப்பயணம்  உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அரிகேசவநல்லூர்  ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் தலைமைவகித்தார்.தலைமையாசிரியர் திரு. ம.ராம் சந்தர்  வரவேற்புரையாற்றி, மாணவர்களிடையே திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற  நிலையினை தக்க வைத்தல் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார் . ஆசிரியை திருமதி.செ .ஜேஸ் மாலா  அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி கூறினர் . நிகழ்வில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அரிகேசவநல்லூர் ஊராட்சி செயலர் திரு.புதியவன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பின்பு ஊராட்சி பகுதியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 









செவ்வாய், 8 நவம்பர், 2022

LIC STUDENT OF THE YEAR 2022 AWARD

 LIC STUDENT OF THE YEAR 2022விருது வழங்கும் விழா இன்று நம்பள்ளியின் ஸ்ரீ சாய் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.விழாவிற்கு சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை மேலாளர்  திரு. வேல்முருகன் அவர்கள் தலைமைவகித்தார்கள் .  சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக உதவி கிளை மேலாளர்  திரு.கருப்பசாமி அவர்கள் முன்னிலைவகித்தார்கள் . தலைமையாசிரியர் திரு. ராம்சந்தர் அவர்கள் வரவேற்றார்கள் .

சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை மேலாளர்  திரு. வேல்முருகன் அவர்கள் மாணவர்களுக்கு  LIC STUDENT OF THE YEAR 2022விருது வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நம் பள்ளியின் நூற்றாண்டு விழா நினைவுப்பரிசு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கபட்டது. பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்துச்செல்வி நன்றிகூறினார்கள். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் , தலைவர்மன்ற உறுப்பினர் திரு மாரியப்பன் மற்றும் அலுவலக ஊழியர் திரு. உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 6 நவம்பர், 2022

மாவட்ட ஆட்சியர் கரங்களால்சான்றிதழ் பெற்ற மாணவர்கள்

 

 மாவட்ட ஆட்சியர் கரங்களால்சான்றிதழ் பெற்ற மாணவர்கள்

இன்று (06.11.22)தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் பாளையம்கோட்டையில் வைத்து  நடத்திய தமிழர்மரபு விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.V. விஷ்ணு I.A.Sஅவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.மாணவர்கள் விளையாடியநம் தமிழர் மரபு விளையாட்டுக்களை ஆட்சியர் அவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு  மகிழ்ந்தார்கள் .மாவட்ட ஆட்சியர்  அவர்களின் திருக்கரங்களால் பரிசு பெற்றது மாண வர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.வாய்ப்பளித்த மயன்  திரு.ரமேஷ் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.