பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 29 ஜூலை, 2023

"என்னால் முடியும்.." தன்னம்பிக்கை விதை நிகழ்ச்சி

"வாழ்க்கையில்  நாம் தடுமாறும்போதெல்லாம் நம்மை தூக்கிநிறுத்துவது தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்."

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையினை விதைத்து வரும்  சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன் கிழமை(02.08.2023) அன்று "என்னால் முடியும்.." என்னும் தலைப்பில் உரையாடவிருக்கிறார்.சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம்அவர்களை நம் பள்ளிக்கு வருக வருக என்று வரவேற்கிறோம் .

www.hindumiddleschool.me 

https://hindumiddleschool.blogspot.com/2023/07/blog-post_29.html 




 


சனி, 22 ஜூலை, 2023

முதல் முயற்சியிலேயே 3 வெண்கலப்பதக்கங்கள்

 முதல் முயற்சியிலேயே 3 வெண்கலப்பதக்கங்கள் 

 திருநெல்வேலி தருவை  எப் எக்ஸ் பாலிடெக்னிக்  கல்லூரியில் வைத்து நடைபெற்ற மாவட்ட அளவிலான ATYA BATYA  போட்டியில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியிலிருந்து  4 அணிகள் (48 மாணவமாணவிகள் ) கலந்து கொண்டனர் . அதில் 3 அணிகள் வெண்கலப்பதக்கங்கள் பெற்றுள்ளனர். ATYA BATYA  போட்டியில் நம் அரிகேசவசநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை ... பயிற்சியளித்த  உடற்கல்வி ஆசிரியர் திரு.சுடலைமணி  மற்றும் அவர்களது குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு  

எப் எக்ஸ் பாலிடெக்னிக்  கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ATYA BATYA அசோசியேஷன் செயலாளர்  திரு .இசக்கி  அவர்களும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்கள் 

www.hindumiddleschool.me

 



 

வெள்ளி, 21 ஜூலை, 2023

நம் பள்ளிக்கென ஒரு தனித்துவமான இணையதளம்...

நம் பள்ளிக்கென ஒரு தனித்துவமான இணையதளம்...

அமெரிக்கா  மிச்சிகன் மாகாணத்தில் செயல்பட்டுவரும் சிலம்பு தொண்டு நிறுவனம் நடத்தும்  இரண்டாம் ஆண்டு  கோடைக் கால சிறப்புப்பயிற்சியில் தமிழ் கற்றுக்கொடுக்கும் தன்னார்வல ஆசிரியராக நானும் ,எம்பள்ளி ஆசிரியரும்  ... எங்களிடம்  தமிழ் கற்கும் அன்பு மாணவர் யுவரோஷனிடம் எம் பள்ளிக்கு ஒரு  இணையதளம் உருவாக்கலாமா? என்று கேட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் இணையதள உருவாக்கப்பணியினை ஆரம்பித்துவிட்டார் ... இன்னும் சிலதினங்களில்  பள்ளி இணையதளம் முழுமையடைந்துவிடும்   ...எனதன்பு மாணவர் யுவரோஷனுக்கும் , எனக்கும் என் பள்ளி ஆசிரியை  திருமதி .ஜேஸ்மாலா அவர்களுக்கும்  சிலம்பு தொண்டுநிறுவனத்தின் சிலம்பு தமிழ் பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியராக  தமிழ் கற்றுக்கொடுக்கும் வாய்ப்புவழங்கிய சிலம்பு தொண்டு நிறுவனத்திற்கும் எனது நண்பரும் ,மிச்சிகன் மாகாண பல்கலைக்கழக இயக்குனருமான முனைவர்.சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை  ...




 

புதன், 19 ஜூலை, 2023

கிளித்தட்டு (Atya Patya) பயிற்சி

நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  இன்று பாரம்பரிய விளையாட்டான  கிளித்தட்டு (Atya Patya) பயிற்சி இன்று அளிக்கப்பட்டது .  உடற்கல்வி ஆசிரியர் திரு. சுடலைமணி  அவர்கள்  மாணவர்களுக்குப்பயிற்சி அளித்தார்கள். இந்த விளையாட்டானது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாகும் . இதில் வெற்றிபெறும்  மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ்  மேற்படிப்பு பயில இடம்கிடைக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது  



வெள்ளி, 14 ஜூலை, 2023

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM )

 திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்  மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM )

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி  ஆர் (MANGO VR )-உடன் இணைந்து  மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM ) இன்று ஆரம்பிக்கப்பட்டது . இதன் மூலம் மாணவர்கள் தங்களின் பாடப்பொருளினை நேரில் பார்த்த உணர்வுடன் பயில்வார்கள் . இன்று மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிநிலையத்தினை  மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM )மூலம் கண்டுகளித்தனர் . நேரில் விண்வெளி ஆராய்ச்சிநிலையத்திற்குள்  இருந்தால் அதனுள் ஏற்படும்ஒலிகளுடன்  உள்ளே நாம் இருக்கும் உணர்வினை ஏற்படுத்தியது. இன்று ஒருவகுப்பறை.......இன்னும் சில நாட்களில் அனைத்து வகுப்பறைகளுக்கும் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM )மேங்கோ வி  ஆர் (MANGO VR )-உடன் இணைந்து  ஆரம்பிக்கப்படவுள்ளது .திரு .கைலாஷ் ஜீவன், டெர்ஸ்பைட் டெக்னாலஜிஸ் LLP - நிறுவனர் மற்றும் CEO,  டெர்ஸ்பைட் டெக்னாலஜிஸ் எல்எல்பி  இணை நிறுவனர் திரு முகமது ஹனிஃபா ரஷிக் மற்றும் திரு. அர்ஜுன்,திரு.சூர்யா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்