பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கலந்துரையாடல் - மாற்றத்தின் ஆரம்பம்

 நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக SKYPE-நேரலை வகுப்பில் இன்று இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி , புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதியின் பிறந்த நாளான இன்று பாரதியின் பாடலோடு ஆரம்பமானது. வகுப்பு நிகழ்வுகள் அனைத்துமே மாணவர்களின் பங்களிப்பாக மட்டும்  இருந்தது.  மாண்புமிகு. அப் துல்  கலாம் குறித்த உரை, ஆங்கில உரையாடல், ஆங்கில உரை, மாநிலங்களின் பெயர்கள்(தலைநகரத்தோடு), மாவட்டங்களின் பெயர்கள், எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு ,பதினென்கீழ்கணக்கு நூல் பெயர்கள் கூறுதல்  ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஆசிரியர்கள்  சண்முக சுந்தரம் , தங்கராஜ், ராம் சந்தர்   மற்றும் மூன்று பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்  மாற்றத்தின் ஆரம்பம் என்பது உறுதி .






திங்கள், 10 டிசம்பர், 2018

அரிகேசவநல்லூர் திரு.T . அருணாச்சலம் பிள்ளை அவர்களின் 100 வது பிறந்தநாள்

அரிகேசவநல்லூர் திரு.T . அருணாச்சலம் பிள்ளை அவர்களின் 100 வது  பிறந்த நாளை முன்னிட்டு  அன்னாரின் புதல்வர் திரு.அ . பாலசுப்பிரமணியன் (Chief Manager,State Bank of India(Rtd))  அவர்கள் தங்கள்  குடும்பத்தினருடன் நம் பள்ளிக்கு வருகை புரிந்து குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினார்கள் . அவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறோம்.