நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக SKYPE-நேரலை வகுப்பில் இன்று இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி , புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதியின் பிறந்த நாளான இன்று பாரதியின் பாடலோடு ஆரம்பமானது. வகுப்பு நிகழ்வுகள் அனைத்துமே மாணவர்களின் பங்களிப்பாக மட்டும் இருந்தது. மாண்புமிகு. அப் துல் கலாம் குறித்த உரை, ஆங்கில உரையாடல், ஆங்கில உரை, மாநிலங்களின் பெயர்கள்(தலைநகரத்தோடு), மாவட்டங்களின் பெயர்கள், எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு ,பதினென்கீழ்கணக்கு நூல் பெயர்கள் கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சண்முக சுந்தரம் , தங்கராஜ், ராம் சந்தர் மற்றும் மூன்று பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல் மாற்றத்தின் ஆரம்பம் என்பது உறுதி .
அருமை ,கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துகள் தொடருவோம்
பதிலளிநீக்குVery good initiative
பதிலளிநீக்கு