பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

நினைவுகள் ......




எம் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தந்து பள்ளியின் செயல்பாடு குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு . எ. சுடலைமணி அவர்களுடன் சேரன்மகாதேவி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வில்சன் சத்யராஜ் , பள்ளி செயலர் திரு.டிவி. சுப்பிரமணியன் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் திரு . பாலமுருகன் ,மூத்த ஆசிரியர் திரு. இரா.மணி ,தலைமை ஆசிரியர் ராம்சந்தர் ஆகியோர் கலந்துரையாடினார்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அஞ்சலி .....



எங்கள் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. மு.அபூபக்கர் அவர்கள் மறைந்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அவர்களை பற்றி சில வார்த்தைகள் ... அன்னாரின் அமைதியான புன்சிரிப்பு இன்னும் எங்கள் நினைவுகளை விட்டு அகலவே இல்லை. ஏதேனும் ஒரு தருணம் அன்னாரை நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது. அவரின் கையெழுத்துக்கு நிகர் அவரே ஆவார். அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல எங்கள் பள்ளிக்கும் பேரிழப்புதான். அன்னாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம் .

வெள்ளி, 25 நவம்பர், 2011

சனி, 12 நவம்பர், 2011

கல்வி உரிமை நாள்
















இந்திய திருநாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்து மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் பதினொன்றாம் நாள் ஆண்டு தோறும் " தேசிய கல்வி நாள் " என கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் இந்நாள் " கல்வி உரிமை நாளாக" கொண்டாடப்பட உள்ளது.










நமது பள்ளியில்பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் மாணாக்கர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.

திங்கள், 7 நவம்பர், 2011

நினைவுகள் ......



எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.கே.சம்பத் அவர்களின் பிரிவு உபசார விழாவின் போது எடுத்த புகைப்படம் . முன்னாள் பள்ளி செயலர் திருமதி.கீதா லக்ஷ்மி , பள்ளி குழு உறுப்பினர் திரு. நடராஜ அய்யர் ,திரு. கே. சம்பத் ,ஆசிரியர் திரு. இரா.மணி ஆகியோர் புகைபடத்தில் இருக்கின்றனர்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

அறிவியல் கொண்டாட்டம்











தொடக்கக் கல்வி துறையின் அறிவியல் கொண்டாட்டம் முகாம் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது . நிகழ்ச்சியினை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. பி. மேரி சொருப ராணி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் திரு. இசக்கியப்பன் திருமதி. வல்சாலா மற்றும் திருமதி. புனிதவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைகளை செய்து காட்டினர் . மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். மாணவர்கள் கேட்ட கேள்விகளில் சில அணு உலயினால் என்ன நன்மை? அதற்க்கு ஏன் இவ்வளவு நாள் கழித்து எதிர்ப்பு? பயம் என்றால் என்ன? ரத்தத்தைஎப்படி வகையாக பிரிக்கிறார்கள்? முடிக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் ? இது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்குரிய பதில்களை தெரிந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் ராமலக்ஷ்மி , மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதன், 5 அக்டோபர், 2011

சரஸ்வதி பூஜை



இன்று காலை எமது பள்ளியில் சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

பரிசு வழங்குதல்



இன்று காலை வீரவநல்லூர் ஹைட்ஸ் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. திரு.காமராஜ் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் ம. ராம்சந்தர் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

மணி ஆசிரியர் குறித்து ......



எங்கள் பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு. இரா. மணி ஆவார். முப்பத்து ஐந்து ஆண்டுகள் ஆசிரியர் பணியில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். எங்கள் பள்ளியின் சிறந்த வழிகாட்டி , இன்று எம் பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது அன்னாரின் முயற்சிதான் என்றால் அது மிகையாகாது. மணி சார் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவில் மிகவும் நேர்மையாகவும் பிறருக்கு உதவும் தன்மையிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

மணி ஆசிரியர் குறித்து ......

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பள்ளி குறித்து .....



எங்கள் பள்ளி 1924வருடம் திரு. சங்கர சுப்பிர மணி அய்யர் அவர்களால் தோற்றுவிகக பட்டது 1975வருடம் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1985வருடம் முதல் நிரந்தர அங்கீகாரத்துடன் நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது.



பள்ளியின் செயலராகவும் முகவராகவும் திரு. சுப்பிரமணியன் அவர்கள் பொறுபேற்று செயல் பட்டு வருகிறார்கள்.






பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள்






ம. ராம் சந்தர் தலைமை ஆசிரியர்



இரா.மணி இடைநிலை ஆசிரியர்



ஆ. அமுதவல்லி இடைநிலை ஆசிரியர்



சே. ஜெஷ்மாலா இடைநிலை ஆசிரியர்



சீ. ராமலக்ஷ்மி ஆசிரியை



ஜே. மணி மேகலை ஆசிரியை



ஆகியோர் மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள் .

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011


எங்கள் பள்ளியின் புதிய கட்டிடங்களை அம்பாசமுத்திரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திருமிகு. இசக்கி சுப்பையா அவர்கள் திறந்து வைத்தார்கள் .

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வாசித்தல்

தற்கால மாணவர்களுக்கு வாசித்தல் எனபது ஒரு கஷ்டமான செயலாகிவிட்டது. வாசித்தலின் மூலம் தான் நமது சிந்தனை திறனை மேம்பட செய்யமுடியும்.

சனி, 9 ஏப்ரல், 2011

இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி மாவட்டம்