பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 27 அக்டோபர், 2016

PARTNERSHIP PROGRAMME 2

பள்ளிபரிமாற்றத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று அம்பாசமுத்திரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 20பேரும், பொறுப்பாசிரியர்கள் திருமதி.ஜாய்ஸ், திருமதி. சங்கர வடிவு ஆகிய இருவரும் நம் அரிகேசவ நல்லூர் இந்து நடுனிலைப்பள்ளிக்கு வருகை தந்தனர். நம் மாணவிகள் இனிப்புகள் மற்றும் மலர்கள் கொடுத்து வரவேற்றனர். தலைமை ஆசிரியர் திரு.ம.ராம் சந்தர் வரவேற்புரை ஆற்றினார். பாப்பாக்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. சோபியா மெர்சி ஆக்னஸ் திட்டம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திட்ட பொறுப்பு ஆசிரியைகள் திருமதி.ஜேஸ்மாலா, திருமதி. முத்துசெல்வி ஆகியோர் கைவினைப்பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி.அமுதவல்லி திருமதி.ஜேஸ்மாலா, திருமதி. முத்துசெல்வி, திருமதி.மணிமேகலை, செல்வி. இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.














PARTNERSHIP PROGRAMME





பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் முதல் நாளான இன்று நம் அரிகேசவ நல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவிகள் 20 பேரும்,பொறுப்பாசிரியர்கள் திருமதி.முத்துசெல்வி,திருமதி.ஜேஸ்மாலா ஆகியோர்அம்பாசமுத்திரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு சென்றனர். மாணவிகளுக்கு புதிய பள்ளி, புதிய ஆசிரியர்கள், புதிய கற்றல் சூழல்,புதிய நண்பர்கள் ஆகியன மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தன. வித்தியாசமான மகிழ்ச்சியான அனுபவம். தலைமைஆசிரியை திருமதி.ஹேமலதா,பொறுப்பாசிரியைகள் திருமதி.சங்கரி, திருமதி.சங்கீதா,திரு.ஹரிசங்கர் ஆகியோர் வெகுசிறப்பாக திட்டத்தினை செயல்படுத்தினார்கள்.