பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 1 டிசம்பர், 2016

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

01.12.2016 இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா,மாற்றுத் திறனாளிகள் குறித்த  விழிப்புணர்வு பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு பாப்பாக்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர்  திருமதி.. சோபியா மெர்சி ஆக்னஸ்  அவர்கள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் திரு. ம. ராம் சந்தர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் திருமதி. ஜேஸ் மாலா  வரவேற்புரை ஆற்றினார். சிறப்பாசிரியர்  திருமதி. காந்திமதி, ஆசிரியை திருமதி. அமுதவல்லி ஆகியோர்  சிறப்புரை ஆற்றினார்கள் . ஐந்தாம் வகுப்பு மாணவி செல்வி. சந்தானம் மரங்கள் வளர்ப்பு குறித்தும், எட்டாம் வகுப்பு மாணவியும் ROTARY INTERACT CLUB தலைவருமான  செல்வி. முப்பிடாதி  மாற்றுத்திறனாளிகள் குறித்தும் பேசினார். எட்டாம் வகுப்பு மாணவிகள் செல்வி பத்மப்ரியா, செல்வி. இந்து ஆகியோர் பூமியின் நிலை குறித்து பாடல் பாடினார்.  நம் மாணவிகளின் நாடகம் நடை பெற்றது.  ஆசிரியை திருமதி. முத்துசெல்வி  நன்றி கூறினார். பின் ROTARY INTERACT CLUB உறுப்பினர்கள், மாணாக்கர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட  மாற்றுத் திறனாளிகள் குறித்த  விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்டது.  விழாவில் நம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. மணிமேகலை, செல்வி. இ ன்பரசி, சிறப்பாசிரியர்கள் திரு. ராயப்பராஜ், திரு. முருகேசன், திருமதி. கிருஷ்ணவேணி, திருமதி. தினகர பேபி ஆகியோர் கலந்துகொண்டனர்.