பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

 

 


 

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

 

 

 

 

பொன்மொழி 

தவறுகளை ஒப்புக்கொள்ளும்  தைரியமும் அவற்றைத் திருத்திக்கொள்ளவதற்கான பலமும்தான் வெற்றிக்கான வழி 

லெனின் 


இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

புதன், 20 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் .



அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை -  76

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.76
 

பொன்மொழி 
கல்வியின் வேர்கள் கசப்பாக இருக்கலாம்...ஆனால்  அது தரும் கனிகள் இனிப்பானவை.
அரிஸ்டாட்டில் 

பின்னணிக்குரல் 
செல்வி.மு.முத்து லெட்சுமி
இந்து நடு நிலைப்பள்ளி 
அரிகேசவநல்லூர் 
திருநெல்வேலி மாவட்டம் 

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 


 

மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு -106

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.      106

 பொன்மொழி 

தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு.... இல்லையென்றால் இந்த உலகம் உன்னைப் புதைத்துவிடும் 

சுவாமி விவேகானந்தர் 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

திங்கள், 18 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 


 

 

 

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

 

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.   

 பொன்மொழி 

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் 

அன்னை தெரசா 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com


சனி, 16 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

 

 


 தோன்றின் புகழோடு தோன்றுக: அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது.

 பொன்மொழி 

உண்மைக்காக எதையும் துறக்கலாம் .. அனால்  எதற்காகவும் உண்மையைத் துறக்காதே ..

சுவாமி விவேகானந்தர் 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

 

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 

 தினம் ஒரு திருக்குறள் 

 


 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

 

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

பொன்மொழி 

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றைப்பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான் 

சாணக்கியர்

 

  

 



இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

 

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

பொன்மொழி 

சுமைகளைக்கண்டு நீ துவண்டு விடாதே..இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.

சுவாமி விவேகானந்தர் 


இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

புதன், 13 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

பொன்மொழி 

வாய்ப்புக்காகக்  காத்திருக்காதே ..உனக்கான வாய்ப்பினை நீயே ஏற்படுத்திக்கொள் 

டாக்டர்.அப்துல்  கலாம் 

Emis website & mobile app -maintenance




Emis website & mobile app _ we are
 Planning for maintenance from today to coming sunday.

 Most of the emis services will not work, kindly inform schools.

- TN EMIS

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

 தினம் ஒரு திருக்குறள் 

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

குறள் 11:

 

 மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

 

பொன்மொழி 

நம் அனைவருக்கும் ஒரேமாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் .ஆனால்  அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரேமாதிரி வாய்ப்புகள் உள்ளன.

டாக்டர். அப்துல் கலாம் 



ஈட்டிய விடுப்பு அரசாணை

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள் -3

 தினம் ஒரு திருக்குறள் -3

 


 

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

குறள் 138

 

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

பொன்மொழிகள் 

 

உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அனேகர்.

 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

சனி, 9 ஏப்ரல், 2022

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்  

 


 

அகன் அமர்ந்து  செய்யாள் உறையும் முகன் அமர்ந்து 

நல்விருந்து ஓம்புவான் இல் 

குறள் 84

 

முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள் 

 

பொன்மொழிகள் 

 

அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.
 

 

 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

EMIS Attendance 100% அடைய வழிமுறைகள்



*EMIS Attendance app வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்*

 *70% ஆசிரியர்கள்*  தங்கள் Emis App ஐ Update செய்யவில்லை என அறியப்படுகிறது

எனவே இந்த link ஐ பயன்படுத்தி Update  செய்யவும்


 வருகை பதிவு மேற்கொள்ளும் முன்னர் Appஐ *Logout and login* கட்டாயம் செய்யவும்


 அவ்வப்போது Emis App ன்  *Cache and History* ஐ Clear செய்யவும் அல்லது வாரம் ஒரு முறை App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்து கொள்ளவும்

 தலைமை ஆசிரியர்கள் Daily Status என்பதை *தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது Network நன்றாக உள்ள இடத்தில்* 9 மணிக்கு முன்பே முடித்து விடவும்

 ஆனால் வருகை பதிவு செய்வது பள்ளியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்

 வருகைப் பதிவு செய்யும் போது Internet  Slow  எனில் Inter நன்றாக உள்ள இடத்தில் Save and Sync செய்து கொள்ளலாம்... இதற்கு அன்றைய தினம் நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுகிறது

வருகை பதிவு முதலில் Mobile App ல் Store ஆகும் அதன் பின்னர் தான் server ஐ சென்றடையும். 


சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருப்பின் தலைமை ஆசிரியர் வருகை பதிவு செய்யலாம்

 தங்கள் பள்ளி EMIS Class and Section ல் தேவையற்ற Section இருப்பின் Delete செய்யவும்

  LKG and UKG உள்ள பள்ளிகள் அவர்களுக்கும் EMIS App ல் வருகை பதிவு செய்யவும்.


திங்கள், 4 ஏப்ரல், 2022

வில்வித்தை அறிமுக விழா

 திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள  வில்வித்தை சங்கம் (Tirunelveli Youth Field Archery Association)  சார்பில்   நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வில்வித்தை அறிமுக விழா இன்று  நடைபெற்றது   திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள  வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association)  செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்கள் மாணவர்களுக்கு வில்வித்தை குறித்து எடுத்துரைத்தார்கள் 

நம் மாவட்டத்தில் முதன்முறையாக வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளியாக நம்  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியை  தேர்ந்தெடுத்த திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள  வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association)  செயலாளர்  திரு. ப. பாரதிராஜா அவர்களுக்கு  பள்ளி  நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம் 

வில்வித்தை பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு  தொடர்பு கொள்ள 6369030091











We help to Focus your Target 

 Tamilnadu Youth Field Archery Association ® . Recognized and Affiliated Member of Field Archery Association of India (FAAI) . (FAAI) Member of International Field Archery Association . Member of The Association for International Sports for All (TAFISA) Recognized International Olympic Committee . (FAAI) Recognized by: School Games Federation of India .              +91 6369030091

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

1-5 ம்வகுப்பு தேர்வு பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு


1-5 வகுப்புகளுக்கு 
தேர்வு இல்லை 
என்று  
தொலைகாட்சி 
SCREEN SHOT 
உடன் ஒரு செய்தி 
பரவியது ஆனால் 
அதில் 
உண்மை இல்லை 
என்றும் திட்டமிட்டப்படி 
1 முதல் 5 ஆம் 
வகுப்புகளுக்கும் 
தேர்வு உண்டு 
என 
பள்ளிக்கல்வித்துறை 
அமைச்சர் 
தற்போது 
பேட்டியளித்துள்ளார்