பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

மணி ஆசிரியர் குறித்து ......



எங்கள் பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு. இரா. மணி ஆவார். முப்பத்து ஐந்து ஆண்டுகள் ஆசிரியர் பணியில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். எங்கள் பள்ளியின் சிறந்த வழிகாட்டி , இன்று எம் பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது அன்னாரின் முயற்சிதான் என்றால் அது மிகையாகாது. மணி சார் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவில் மிகவும் நேர்மையாகவும் பிறருக்கு உதவும் தன்மையிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

மணி ஆசிரியர் குறித்து ......

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பள்ளி குறித்து .....



எங்கள் பள்ளி 1924வருடம் திரு. சங்கர சுப்பிர மணி அய்யர் அவர்களால் தோற்றுவிகக பட்டது 1975வருடம் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1985வருடம் முதல் நிரந்தர அங்கீகாரத்துடன் நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது.



பள்ளியின் செயலராகவும் முகவராகவும் திரு. சுப்பிரமணியன் அவர்கள் பொறுபேற்று செயல் பட்டு வருகிறார்கள்.






பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள்






ம. ராம் சந்தர் தலைமை ஆசிரியர்



இரா.மணி இடைநிலை ஆசிரியர்



ஆ. அமுதவல்லி இடைநிலை ஆசிரியர்



சே. ஜெஷ்மாலா இடைநிலை ஆசிரியர்



சீ. ராமலக்ஷ்மி ஆசிரியை



ஜே. மணி மேகலை ஆசிரியை



ஆகியோர் மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள் .

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011


எங்கள் பள்ளியின் புதிய கட்டிடங்களை அம்பாசமுத்திரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திருமிகு. இசக்கி சுப்பையா அவர்கள் திறந்து வைத்தார்கள் .