பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

தினம் ஒரு திருக்குறள் -3

 


 

தினம் ஒரு திருக்குறள் 

குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

இன்றைய பொன்மொழி  

நீங்கள் செய்யும் தர்மம்
ஒரு போதும் உங்கள்
செல்வதை குறைக்காது.

- நபிகள் நாயகம்

அறிவியல் துளிகள்  

அச்சுறுத்தும் 'நானோ' பிளாஸ்டிக்

வடக்கு அட்லாண்டிக் கடலில் 2.7 கோடி டன் 'நானோ' பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடல் உணவுச்சங்கிலியை பாதித்து கடல்வாழ் உயிரினங்களை அழிக்கும் திறன் கொண்டது. மேலும் மனித உடல் உறுப்புக்குள் ஊடுருவும் ஆபத்து மிக்கது என ராயல் நெதர்லாந்து கடல் ஆராய்ச்சி நிறுவனம், யுட்ரெட்ச் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு மைக்ரோமீட்டருக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் துகள், நானோ துகள் எனப்படுகிறது. இதை கண்ணால் பார்க்க முடியாது. பெரிய பிளாஸ்டிக் உடைவதில் இருந்து இந்த நானோ பிளாஸ்டிக் துகள் உருவாகிறது.

பொது அறிவு 

இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?

விடை: நீலகிரி தாஹ்ர் மான் 

பழமொழி 

இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

தினம் ஒரு திருக்குறள் -2

 


தினம் ஒரு திருக்குறள் 

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

கேட்டவர்‌ பலரும்‌ வெறுக்கும்படியாகப்‌ பயனில்லாத சொற்களைச்‌ சொல்லுகின்றவன்‌, எல்லோராலும்‌ இகழப்படுவான்‌.

இன்றைய பொன்மொழி  

துணிவு....இதில்தான் உங்களின்  மேதைத்தனம் ,அற்புதம் ,ஆற்றல்  என அனைத்தும்  புதைந்து கிடக்கின்றன ..... கதே 

அறிவியல் துளிகள்  

பூமிக்கு ஆறு நிலவுகள்

விண்கல், சிறுகோள் உள்ளிட்டவை பூமிக்கு அருகே வரும் போது அதை தற்காலிக சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம். இந்நிலையில் எந்த நேரத்திலும் பூமி ஆறு 'சிறிய நிலவுகளை' தற்காலிகமாக வைத்திருக்கலாம். இது அளவில் (6.5 அடி நீளம்) சிறியதாக இருப்பதால் பார்க்க முடியாது என ஹவாய் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. '2024 பி.டி.5' விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, 2024 செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் தற்காலிக நிலவாக சுற்றி வந்து, பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி அதன் சுற்றுப்பாதையில் சென்றது.

பொது அறிவு 

வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்

விடை: அகிலன்

பழமொழி 

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது

வியாழன், 31 ஜூலை, 2025

தினம் ஒரு திருக்குறள்

 

 


 தினம் ஒரு திருக்குறள் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது 

தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு ஆக முடியாது

இன்றைய பொன்மொழி  

உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்.  

அறிவியல் துளிகள்  

மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. மின்னலில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தளவு வெப்பம் கொண்ட மின்னல், மரத்தின் மீது பாயும் போது, மரத்தின் உட்பகுதியில் உள்ள நீர் முதலான பொருட்கள் ஆவியாகி விரிவடைந்து வெடிப்பது போன்ற வினை ஏற்படும். மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பாக இருப்பது அவசியம். 

பொது அறிவு 

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

பழமொழி 

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.