பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 19 ஏப்ரல், 2021

நன்றிகள்..

 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்று 13ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 12 ஆண்டுகளான  எனது பணி 12 நிமிடங்கள் கடந்த மாதிரி உள்ளது.  இப்பதவியில் என்னை அமர வைத்த எம் பள்ளி செயலர் திரு. தி. வி. சுப்பிரமணியன் சார் மற்றும் எனது தந்தை திரு. இரா. மணி  ஆகியோரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும்  என்னுடன் பயணித்து  பொருளுதவி செய்து  இன்று (பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் புதிய கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆண்டிராய்டு டீ வி க்கள் , சி சி டீ வி கேமராக்கள், கணிப்பொறிகள் , டெஸ்க் பெஞ்சுகள் , விளையாட்டு மைதானம் ...) அனைத்து வசதிகளும் நிறைந்த பள்ளியாக மாற்றிய பெரியோர்களாகிய  திரு. கணபதி சுப்பிரமணியன் சார் , திரு. எம். ஹஜ். இப்ராஹிம் சார் , டாக்டர். ராமசுப்பிரமணியன் சார் , திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன் , திரு. சூரியநாராயணன் சார் , திரு. பாலசுப்பிரமணியன் சார் ,










திரு. ராபர்ட் சார் , ஷேச சாயி  பேப்பர் மில் நிர்வாகத்தினர், திரு. மனோகரன் சார், திரு. பாலமுரளி சார் , திரு. குப்புசாமி சார் , காஜா பீடி நிறுவனத்தார்,செல்வி தீபா , எனது நண்பர்கள்  மற்றும் முகநூல் நண்பர்கள்  ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.

நம் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு எனது பணி  சிறப்பிக்க அமைய எங்களை வழி நடத்திவரும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும், அலுவலகப்பணியாளர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள் .

எனது பணியில் எனக்கு உறுதுணையாக இருந்து  வரும் என்னுடன் பணிபுரியும்  ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி திருமதி முத்துச்செல்வி , திருமதி.ஜேஸ் மாலா , திருமதி .கோமதி, என் குடும்பத்தினர்   மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கும்  எனது நன்றிகள்..

அனைத்திற்கும் மேலாக என் மாணவச்செல்வங்களுக்கும் .பெற்றோர்களுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ..

இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்... ஆனால் துளி கூட தயக்கமில்லை.. ஏனென்றால் மேற்கூ றிய  அனைவரும் என்னுடன் .......