பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 31 மார்ச், 2022

இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாநிலதலைநகரங்கள்

 இந்தியாவின்  மாநிலங்கள் மற்றும் மாநில தலைநகரங்கள் - குறித்து கூறுகிறார் எம்  அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவி செல்வி 


 

தமிழில் என்ன இருக்கிறது ? இதோ எம் மாணவியின் பதில்

 தமிழில் என்ன இருக்கிறது ? இதோ அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் மாணவி முத்து ராணியின் பதிலை கேளுங்கள் 



வகுப்பு 5 அறிவியல் -விலங்குகள் -வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி

 வகுப்பு 5  அறிவியல்  -விலங்குகள் -வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியினை  பாடல் வாயிலாக கற்றுக்கொடுக்கிறார் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின்  ஆசிரியை திருமதி. செ . ஜேஸ் மாலா 

 


 

TLM MODELS

தயாரிப்பு

S.JESMALA
HINDU MIDDLE SCHOOL
HARIKESAVANALLUR

Teaching the Days Of the Week in a simple way

 


Word Practice


 

Proverbs

 


திங்கள், 28 மார்ச், 2022

Class 6 | வகுப்பு 6 | சமூக அறிவியல் | புவி மாதிரி | அலகு 2 | பகுதி 2 | KalviTv


 

Class 4 | வகுப்பு 4 | தமிழ் | உறவுமுறைக் கடிதம் | இயல் 8 | KalviTV

 


Class 6 | வகுப்பு 6 | தமிழ் | ஆசிய ஜோதி | பாடம் 3 | KalviTv


 

Class 7 | வகுப்பு 7 | தமிழ் | தன்னை அறிதல் | இயல் 3 | பகுதி 2 | KalviTV

 


Class 3 | வகுப்பு 3 | தமிழ் | மழைநீர் | இயல் 4 | KalviTV


 

Class 2 | English | People Who Help Us | Unit 3 | Part 4 | KalviTV


 

Class 5 | வகுப்பு 5 | கணிதம் | பின்னங்கள் | அலகு 5 | பகுதி 2 | KalviTV


 

Class 6 | வகுப்பு 6 | கணிதம் | சமச்சீர்த் தன்மை | அலகு 4 | பகுதி 3 | KalviTV

 


Class 7 | வகுப்பு 7 | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | பகுதி 3 | KalviTv


 

Class 4 | English | Creativity Around Me | Unit 2 | Part 6 | KalviTV


 

Class 7 | English | Jane Eyre | Unit 3 | Part 2 | KalviTv


 

Class 6 | வகுப்பு 6 | சமூக அறிவியல் | பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் | அலகு 3 | KalviTv


 

வெள்ளி, 25 மார்ச், 2022

பிரமிக்க வைத்த பொருநை புத்தகத்திருவிழா

 பிரமிக்க வைத்த பொருநை புத்தகத்திருவிழா 

இன்று அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் ,செயலர் மற்றும் ஆசிரியர்களுடன்  இன்று  நெல்லை பொருநை புத்தகத்திருவிழாவிற்கு தமிழ் நாடு அரசுப்பேருந்தில் சென்றோம்.. மாணவர்களை அழைத்து சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து விடுவதற்கு மிகக்குறைந்த பணமே பெற்றனர். அனைத்து துறையினரின் கண்காட்சியும் மாணவர்களை  மகிழ்வித்தது.   நம் பள்ளி மாணவர்கள் இத்தனை பெரிய புத்தகக்கடைகளையும்  புத்தகங்களையும் பார்ப்பது இதுவே முதன்முறை... மாணவர்கள் அனைவரும் அவர்களுக்குப்பிடித்த புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.  தொல்லியல் துறை கண்காட்சி, பள்ளிக்கல்வித்துறை கண்காட்சி, இல்லம் தேடிக்கல்வி கண்காட்சி மாணவர்களின் மனம் கவர்ந்தது.  நற்றிணை பதிப்பகத்தார் ரூபாய் 100 விலையில் புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பினை (688 பக்கங்கள்)வெளியிட்டிருக்கிறார்கள் . இன்னும் இரண்டு தினங்களே உள்ளது. அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள்..  மிகச்சிறப்பாக நடத்திவரும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ...

மாணாக்கர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்று கனிவன்புடன் நடந்து கொண்ட தமிழ் நாடு அரசுப்போக்குவரத்துக்கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்..  பேரூந்தினை மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கிய தமிழ் நாடு அரசுப்போக்குவரத்துக்கழக திரு நெல்வேலி மேலாளருக்கும் சேரன்மகாதேவி கிளை மேலாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

 


 













புதன், 23 மார்ச், 2022

உயரிய_இலட்சியத்தை_அடைய திண்ணை போதும் திருப்புகழ் ஐஏஎஸ்

    தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் சகோதரர் திருப்புகழ் ஐஏஎஸ். 

   இவர்,
  தான் ஐஏஎஸ் ஆனது குறித்தும் வாழ்க்கையின் தத்துவம் குறித்தும் ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியிலிருந்து...

    "எங்கள் ஊர் சேலம். 
 எங்கள் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அப்பாவும் அம்மாவும் எனக்கும் தம்பிக்கும் ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, உள்ளதைக் கொண்டு நல்லது செய் போன்ற பண்புகளை சொத்தாகக் கொடுத்தனர். நாங்கள் அதன் வழி நின்றோம். கர்நாடக கச்சேரி மேடைகளில் தம்புரா ஒலிப்பதுபோல் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்த நற்பண்புகள் எங்களின் வாழ்க்கையில் இன்றளவும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அப்பா ஒரு சிறந்த மனிதர். மனிதர்களை மதிக்கத் தெரிந்த மனிதர். 
அவரிடமிருந்து நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம். 

   சிறு வயதில் எனக்கு ஐஏஎஸ் கனவெல்லாம் கிடையாது. 
 17 வயதிலேயே ஓஷோ ரஜ்னீஸ் படித்தேன். ஜெ.கிருஷ்ணமூர்த்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பெங்களூருவில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அப்போது என் தம்பி இறையன்பு கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பை முடித்துவிட்டு அவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆனார். வீட்டில் எல்லோருக்கும் பெரும்மகிழ்ச்சி.

எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் அவர் படிப்பார். 
எந்த பயிற்சி மையத்துக்கும் அவர் செல்லவில்லை. 

  அவரைப் பார்த்து சிவில் சர்வீஸ் மீது எனக்கும் ஈர்ப்பு வந்தது. ஏற்கெனவே அவர் எழுதியிருந்ததால் நானும் எழுதலாம் என்று எழுத முயற்சித்தேன் ஆனால் எனக்கு வயதில்லை. அந்த ஆசையை விட்டுவிட்டேன். வங்கியில் அதிகாரியாக வேலை இருந்ததால் அதில் நாட்டம் செலுத்திவந்தேன். 

  அப்போது வி.பி.சிங் அரசு மத்தியில் அமைந்தது. அந்த அரசு ஐஏஎஸ் தேர்வு எழுத இரண்டாண்டுகள் வயது வரம்பை தளர்த்தியது. 
 30 வயது வரை எழுதலாம் என்றது. இதனால் நான் மீண்டும் விண்ணப்பித்தேன். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சியில் ஒரு அறை எடுத்து தயாரானேன். தமிழகத்தில் முதல் இடத்திலும், ஆல் இந்தியா அளவில் 24ஆம் இடத்திலும் வெற்றி பெற்றேன். ஆகையால் பயிற்சி மையத்தில் சேர்ந்து தான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

“ஐஏஎஸ் ஆவதற்கு பயிற்சி மையம் எதற்கு? 
  திண்ணை போதும்”  

என் வாழ்க்கையில் நான் இரண்டு கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஒன்று, தனிப்பட்ட வெற்றி என்ற எதுவும் இல்லை. சமுதாய பங்களிப்பு இல்லாமல் யாரும் எதையும் சாதிக்க முடியாது. நான் என்ற அகந்தையை விட்டுவிட வேண்டும். நாம் என்ன சாதித்தாலும் அதற்கு இந்த சமுதாயத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.

இன்னொரு தத்துவம் ஒரு ஜென் துறவி உணர்த்தியது. அந்தத் துறவி தன் தத்துவங்களை எல்லாம் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அதை புத்தகமாக பிரசுரம் செய்ய பணம் சேர்த்துவைத்துள்ளார். அதை அச்சிடலாம் என நினைக்கும்போது அவரது கிராமத்தில் பஞ்சம் வருகிறது. கிராமத்தின் நிவாரணத்துக்காக பணத்தை கொடுத்துவிடுகிறார். 

இரண்டாவதாக மீண்டும் பணம் சேர்க்கிறார். மீண்டும் புத்தகத்தை அச்சிடச் செல்லும்போது ஊரில் வெள்ளம் வந்துவிடுகிறது. பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்து விடுகிறார். 

மூன்றாவது முறையாக அவர் புத்தகத்தை அச்சிட்டுவிடுகிறார். அப்போது அவர் புத்தக வெளியீட்டு விழாவில்" நான் இந்தப் புத்தகத்தை ஏற்கெனவே இரண்டு எடிசன் பதிப்பித்துவிட்டேன். அந்த இரண்டும் இதைவிட சிறப்பானவை" என்றார். தத்துவம் என்பது புத்தகத்தில் அச்சிடுவது இல்லை. அது வாழ்க்கையில் பிறருக்கு உதவுவதை கொள்கையாகக் கொள்வது. அதுதான் ஆன்மீகம். அதுதான் சமையம், அதுதான் மனிதம்.
🟢🔴🔵🟢🔴🔵🟢🔴🔵

பகிர்வு

இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா காணொளி

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவிண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை  தலைமையில் " மார்ச் 22 செவ்வாய் மாலை 5.00க்கு நடைபெற்றது .மிகச்சிறந்த பேராளுமைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நம் பள்ளியும் பங்கு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்யும் இந்த நிகழ்வில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கு கொண்டு பரிசு பெற காத்திருக்கிறார்கள் .. வாய்ப்பளித்த சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர் ரவிசொக்கலிங்கம் அய்யா  அவர்களுக்கும் வலைத்தமிழ் பார்த்தசாரதி அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  நிகழ்வில் காணொளியை இன்று நம் பள்ளி மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் 
 


 


காணி குறும்படம்- CollectorTirunelveli YouTube Channel

திருநெல்வேலி மாவட்ட கலைமன்றம்  வழங்கும் காணி குறும்படம் இன்று மாணவர்களுக்கு Collector Tirunelveli  YouTube Channel  மூலமாக காண்பிக்கப்பட்டது. மிகவும் அழகாக நேர்த்தியாகத் திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் ... நாம் ஒவ்வொருவரும் காணவேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய குறும்படம் ... திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றியும் வணக்கங்களும்...


Collector Tirunelveli Youtube Channel --click here

 




அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி தொடக்க விழா


 

திங்கள், 21 மார்ச், 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா ,
விண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை  தலைமையில் " மார்ச் 22 செவ்வாய் மாலை 5.00க்கு நடைபெறும்.
....திரு .பார்த்தசாரதி மற்றும் தலைமை ஆசிரியர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்வில் 
திருக்குறள் பயிற்சி ஆளுமைகளை  அறிமுகப்படுத்தி திரு.மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை ஆற்றுவார். கடந்த சில மாதங்களாக ,பள்ளிகளில் தொடங்கப்பட்ட நிகழ்வை தமிழகமெங்கும் எடுத்து செல்லும் முயற்சி .... ,வலைத்தமிழ் டிவி நேரலையில் ...



இல்லம் தேடிக்கல்வி சிறப்பு அலுவலர் அவர்களின் திருநெல்வேலி தென்காசி சுற்றுப்பயண விபரம்



 இல்லம் தேடிக்கல்வி சிறப்பு அலுவலர் அவர்களின் திருநெல்வேலி தென்காசி சுற்றுப்பயண விபரம் 

TRB SYLLABUS

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு!!!*_

 *(TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கானது.)

Today activities of my students....

Today activities of my students....
S.MUTHUSELVI.,M.Sc.,B.Ed
BT ASSISTANT
HINDU MIDDLE SCHOOL
HARIKESAVANALLUR

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

ஞாயிறு, 20 மார்ச், 2022

வாங்க ... வாங்க......நம்ம பள்ளிக்கூடத்தில சேருங்க...

 

வாங்க ... வாங்க......நம்ம பள்ளிக்கூடத்தில   சேருங்க...


பாகம் 5 | காணி மக்களின் தொழில் மற்றும் கல்வி


 

பாகம் 4 | காணி மக்களின் உணவு மற்றும் மருத்துவமுறைகள்


 

பாகம் 3 | காணி மக்களின் பாரம்பரியமும் சமூக நடைமுறைகளும்

 


பாகம் 2 | காணி மக்களின் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள்


 

பாகம் 1| காணி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு

 


இலக்கியம் அறிவோம்

தமிழ் சிறுகதைகள், நாவல்கள்,கவிதை நூல்களின் விமர்சனங்களை அழகாக நேர்த்தியாக முன்வைக்கிறார் பேராசிரியர் முனைவர். பிரேமா..

வியாழன், 17 மார்ச், 2022

ஆளுமைகளுடன் கலந்துரையாடல்

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின்  கல்வி  மற்றும் தன்னம்பிக்கையினை  வளர்க்கும் நோக்கில்  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களுடன்  காணொளி காட்சி மூலம்  மாணவர்களின் நேரடி கலந்துரையாடல்கள்... பொது அறிவு ,ஆங்கிலப்பேச்சுப்பயிற்சி ,மொழிகள் அறிமுகம் , போட்டித் தேர்வுகள் , அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை வளர்த்தல் ....ஆளுமைகளுடன் நேரடி கலந்துரையாடல் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள்...