பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 19 செப்டம்பர், 2022

நூற்றாண்டு விழா - ஸ்ரீ சாய் கட்டிடத்திறப்பு விழா

நூற்றாண்டு விழா -  ஸ்ரீ சாய் கட்டிடத்திறப்பு விழா 

பாப்பாக்குடி சரகம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் புதிய கட்டிடமான  ஸ்ரீ சாய் கட்டிடத்  திறப்பு விழா 15.09.2022 வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி L .ரெஜினி.,M.A.,M.Ed.,M.Phil.,அவர்களின்  தலைமையுரை வகித்தார்கள் . பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் ,நிர்வாகக்குழுஉறுப்பினர்கள் திரு.வெ ங்கடசுப்பிரமணியன்,திரு.இரா.மணி மற்றும் ஜூலி வெ ங்கடசுப்பிரமணியன்  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி L .ரெஜினி  அவர்கள் புதிய கட்டிடமான ஸ்ரீ சாய் கட்டிடத்தினைத் திறந்து வைத்து தலைமையுரை ஆற்றினார்கள் . அல்பா முகம்மது ஹுசைன் அறையினை வீரவநல்லூர் அல் பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் திறந்து வைத்தார்கள். விழாவிற்கு வருகைபுரிந்தவர்களை ஆசிரியை திருமதி.ஜேஸ் மாலா  வரவேற்றார்கள். தலைமையாசிரியர் திரு. ம. ராம்சந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்கள்.பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் திரு. ஜோசப் கிரகோரி .பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சி. மீனாட்சி, திருநெல்வேலி நகர் வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சு.கல்யாணி, குருவிகுளம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.ப. சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிர்வாகக்குழுஉறுப்பினர்கள் திரு.வேங்கடசுப்பிரமணியன்,திரு.இரா.மணி,ஓய்வு பெற்ற வங்கி  அதிகாரி திரு.பாலசுப்பிரமணியன் , முன்னாள் மாணவி லலிதா ,வெங்கட் ஆகியோர் சிறப்புரையாற்றினார் .விழாவில் சிறப்பு விருந்தினர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள் .மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தற்காப்புக்கலையான டேக்வாண்டே  மற்றும் சிலம்பம் ஆகியவற்றின் நிகழ்வுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள் ,ஆசிரியை திருமதி. ஜெ.மணிமேகலை நன்றியுரை கூறினார்கள். நிகழ்ச்சியை ஆசிரியர் திருமதி. சு.முத்துச்செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் . விழாவிற்கான ஏற்பாடுகளை  ஆசிரியைகள் திருமதி. அ .அமுதவல்லி.திருமதி.ம.கோமதி ,திருமதி சு.ஜெயலட்சுமி,திருமதி ம. சண்முகத்தில்லை ,திருமதி து.முருகத்தாய் ,திருமதி.சோ.ப்ரேம்கலா ,டேக்வாண்டே  மற்றும் சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் திரு. ப. பாரதிராஜா ஆகியோர் செய்திருந்தனர் .

அதி நவீன HI-TECH COMPUTER LAB...எம் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும் பயன்பெற ...

 எம் பள்ளியின் அடுத்தகட்ட நகர்வின் ஆரம்பம்...

அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின்  நூற்றாண்டு விழா கொண்டாடும் 2022-23ம் கல்வியாண்டில் எங்களின் அடுத்த இலக்கு மாணவர்களின் கணினி அறிவினை வளர்க்க ..... 10 கணிப்பொறிகள்,தொடுதிரை,ப்ரொஜெக்டர்,பெரிய ஆண்டிராய்டு தொலைகாட்சி ,நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் அமைந்த HI-TECH COMPUTER LAB...

இதனை விழா மேடையில் அறிவித்த அடுத்த கணம்... திரு.சரவணன் பட்டர் அவர்கள் நவீன தொழில்நுட்பம் நிறைந்த    ப்ரொஜெக்டர் மற்றும்  பெரிய ஆண்டிராய்டு தொலைகாட்சியினை  இன்று நம்பள்ளிக்கு வழங்கினார்கள்.மேலும் என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள் செய்ய தயாராக இருக்கிறேன்  என்று கூறிய நம்பிக்கை வார்த்தை எங்களை மேலும் வளர்க்கும்...

விரைவில் அதி நவீன HI-TECH COMPUTER LAB...எம் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும்  பயன்பெற ...