பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 28 அக்டோபர், 2021

விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்

 2021-22ம் கல்வியாண்டின்  இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும்  நோட்டுப்புத்தங்கங்களை நம் பள்ளி மாணவர்களுக்கு இன்று பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed., M.Phil., அவர்கள் இன்று வழங்கினார்கள் 

விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்

 




 

புதன், 27 அக்டோபர், 2021

தனித்துவமிக்க தலைமையாசிரியர்விருது

சர்வீஸ் டூ சொசைட்டி டிரஸ்ட்மற்றும் வலைதமிழ் டி வி இணைந்து வழங்கிய தனித்துவமிக்க தலைமையாசிரியர் விருதினை பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சு.கல்யாணி., M.Sc .,M.Phil.,M.Ed.,M.Phil.,அவர்கள் இன்று வழங்கினார்கள்.. விருது அளித்த சர்வீஸ் டூ சொசைட்டி டிரஸ்ட் அன்புசகோதரர் ரவிசொக்கலிங்கம் சார் மற்றும் வலைதமிழ் டி வி பார்த்தசாரதி சார் அவர்களுக்கும்எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 25 அக்டோபர், 2021

சனி, 2 அக்டோபர், 2021

நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழு சங்கம நிகழ்வு

நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழு சங்கம நிகழ்வில் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்..
நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

முனைவர் பட்டம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலருக்கு பாராட்டு

 

பாப்பாக்குடி சரக தலைமையாசிரியர்கள் கூட்டம் இன்று பாப்பாக்குடி வட்டார வள மையத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். பாப்பாக்குடி வட்டாரக்  கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . முனைவர் பட்டம் பெற்றமைக்கு  சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்ளை பாப்பாக்குடி வட்டாரக்  கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.  வட்டார வள மையம் சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள், பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், சுகாதார நடவடிக்கைகள், ஆசிரியர்களின் கடமைகள் ஆகியன குறித்து  மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களும் எடுத்துரைத்தார்கள்