பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

இளைஞர் எழுச்சி நாள்


15.10.2015 இன்று இந்திய சரித்திரத்தின் ஒரு உன்னதமான நாள் . ஆம்  நம் இந்திய திருநாட்டின் தலைமகன்  ஏவுகணை நாயகன்  நம் மண்ணின் மைந்தர் நம் அனைவரின் வழிகாட்டி டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளினை  இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம். நம் பள்ளியில் நடைபெற்ற விழாவின் சில காட்சிகள் உங்களின் பார்வைக்கு......









வியாழன், 24 செப்டம்பர், 2015

DFC 2015 HINDU MIDDLE SCHOOL HARIKESAVANALLUR

DESIGN FOR CHANGE 2015

 DESIGN FOR CHANGE 2015-ற்காக  மிக கடினமாக உழைத்த  நம் மாணவ செல்வங்களையும்  திட்டத்திற்கு வழி காட்டிய  ஆசிரியை திருமதி. ஜெஸ்மாலா  அவர்களையும், உடன் வழிகாட்டிய  ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.முத்து செல்வி , திருமதி.மணிமேகலை மற்றும் செல்வி. இன்பரசி  ஆகியோரை  பள்ளி நிர்வாகம்  சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.




செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நன்றி

 நமது பள்ளிக்கு 5 மரக்கன்றுகள் அளித்த சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், கூண்டுகள் அளித்த அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றத்திற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்து நடுநிலைப்பள்ளி  அரிகேசவநல்லூர்

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

மரம் நடும் விழா

இன்று(04.09.2015) மாலை  அரிகேசவநல்லூர்  இந்து நடு நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றம்  மற்றும்  அரிகேசவநல்லூர்  இந்து நடு நிலைப் பள்ளி மாணவர்கள்  இணைந்து மரக் கன்றுகள் நட்டார்கள். விழாவில் அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெய லட்சுமி , ஸ்காட் கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் ராம்சந்தர், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.




ஆசிரியர் தின விழா

நமது பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எனது ஆசிரியரும் நானும் என்னும் தலைப்பில் மாணவர்கள் உரையாற்றினார்கள். தலைமை ஆசிரியர் ம. ராம்சந்தர்  சிறப்புரை ஆற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அமுதவல்லி,ஜெஷ்மாலா ,முத்துசெல்வி,மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.



வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நினைவலைகள்...

நினைவலைகள்...








  எம பள்ளியில் பணிபுரிந்த, பணிபுரிகின்ற  ஆசிரியர்கள்  மற்றும்  பள்ளியின் செயலர் மற்றும் மாணவ மாணவியர்களின் அரிய புகைப்படங்கள்  1953-54 ம் கல்வியாண்டு முதல்.....

சனி, 15 ஆகஸ்ட், 2015

நமது பள்ளியில் சுதந்திர  விழா இன்று வெகு சிறப்பாகக்   கொண்டாடப்பட்டது . பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன்  தலைமை ஏற்று நமது தேசிய கொடியை  ஏற்றினார்கள். விழாவில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , முத்துசெல்வி,ஜெஸ்மாலா , இன்பரசி மற்றும் திரு. மனோகரன், திரு. பாலமுரளி ,மற்றும் பெற்றோர்கள்  மாணவ மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.