பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 18 மே, 2023

அடிப்படை ரோபோடிக்ஸ் வடிவமைப்புப் பயிற்சி

  அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் அடிப்படை   ரோபோடிக்ஸ் வடிவமைப்புப்  பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. பயிற்சியினை  திரு.P .முத்துவிஸ்வநாதன் D.E.C.E.,M.E.,M.A., அவர்கள் நடத்தினார்கள் . அன்னாருக்குத்துணையாக அவருடைய மாணவிகள் செல்வி.சுபஸ்ரீ,செல்வி.சூர்யா,செல்வி.கிருஷ்ணப்ரியா ,செல்வி.கலைச்செல்வி,செல்வி.சவிந்தனாதேவி,செல்வி.செல்வி.ஆதிலட்சுமி,  செல்வி .சுபிட்ஷா ஸ்ரீ ஆகியோர்  மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பற்றிய அறிமுகமும், சிறு ரோபோக்களை செய்து காட்டியும் , மாணவர்களை  சிறு ரோபோக்களை உருவாக்கவும் பயிற்சியளித்தனர். மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாகவும், ஆர்வமாகவும்  கலந்து கொண்டனர்.நிகழ்விற்கான  ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர் 








செவ்வாய், 16 மே, 2023

சம்பூர்ண சிக் ஷா -ஆங்கிலப்பேச்சுப்பயிற்சி

 மும்பையில் உள்ள கல்விக்கான தன்னார்வ  தொண்டு நிறுவனமான  சம்பூர்ண சிக் ஷா   நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு  ஜூன் மாதம் முதல் ஆங்கிலப்பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளார்கள் ... அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த இணைய வழி க்கூட்டம்   இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன்  திரு.வெங்கடராமன்    சம்பூர்ண சிக் ஷா திருமதி.புஷ்பா மற்றும்  திருமதி.ரேகா மற்றும் இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.வரும் ஜூன் முதல் வாரம் முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்