பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 5 ஆகஸ்ட், 2023

லைக் &ஷேர்-இருண்ட பக்கம் | இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் மிரட்டல்

 லைக் &ஷேர்  இன்றைய சூழலில் நம்மில் பெரும்பாலோர் இதில் கட்டுண்டு இருக்கிறோம். இதன் இருண்ட  பக்கத்தின் அபாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  04.08.2023 இன்று நம் அரிகேசவநல்லூர் இந்துநடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு * "விருப்பங்கள் மற்றும் பகிர்வுகளின் இருண்ட பக்கம் |  இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் மிரட்டல்"* என்னும்  தலைப்பில்

திரு .தமிழரசன்(சைபர் பாதுகாப்பு பிரிவு |  உள்துறை அமைச்சகம் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.)
 திரு.கவியரசன்
 (தொழில்நுட்ப இயக்கத் தலைவர்,சைபர் லாவண்டர்) காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

      இனி வரும் காலங்களில் இந்த வகுப்பானது தொடர்ந்து நடைபெறும். விருப்பமுள்ள  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்....

இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி 




என்னால் முடியும் ... தன்னம்பிக்கை நிகழ்ச்சி

என்னால் முடியும் ... தன்னம்பிக்கை  நிகழ்ச்சி  

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில்  இன்று என்னால் முடியும்.. என்னும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி  ஸ்ரீ சாய்க்கட்டிடத்தில் உள்ள அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு அறையில் வைத்து நடைபெற்றது. மாணவி சுபஸ்ரீ வரவேற்புரையாற்றினார் .விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திரு.ம.ராம்சந்தர் அவர்கள் தலைமைவகித்தார்கள்.பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர் திரு.ரவிசொக்கலிங்கம் அவர்கள் "என்னால் முடியும்.." என்னும் தலைப்பில் உரையாற்றினார் .இந்த நிகழ்வானது திரு.ரவிசொக்கலிங்கம் அவர்களின் 130 வது  பள்ளி நிகழ்வாகும்.130 பள்ளிகள்,57 கல்லூரிகளில் திரு.ரவிசொக்கலிங்கம் அவர்கள் தன்னம்பிக்கை உரை ஆற்றியுள்ளார்.மாணவர்களிடம் ,'ஜெயிப்பவர்கள் காரணம் சொல்வதில்லை , காரணம் சொல்பவர்கள் ஜெயிப்பதில்லை',கவனச்சிதறல்கள் நம்மிடம் இருக்கக்கூடாது ,உயர்ந்த எண்ணம் இருக்கவேண்டும் ,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஊறுகாய் போல பயன்படுத்தவேண்டும் ,முழு கவனமும் படிப்பில் செலுத்தவேண்டும் ,நான் உறுதியாக சாதிக்கவேண்டும்  என்ற எண்ணத்துடன் நிலைத்தன்மையான,நேர்மையான உழைப்பு வேண்டும் ,எண்ணமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் சாதனனையாளராக மாறலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி  பேசினார்கள் . மாணவிகள் மீனாட்சி,மாரியம்மாள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள் . பட்டதாரி ஆசிரியை திருமதி.முத்துச்செல்வி நன்றியுரை  கூறினார்கள்