பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

NEWS 7 தமிழ் திரு. செந்தில்வேலுடன் எம் மாணவர்கள் கலந்துரையாடல்

NEWS 7 தமிழ் தலைமை செய்தியாளர்  திரு. செந்தில்வேலுடன்  எம் மாணவர்கள் கலந்துரையாடல்  நிகழ்ச்சி இன்று அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது. செந்தில் அவர்கள் மாணவர்களிடம் ஊடகம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். செய்தியினை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினார். மாணவர்களின் கேள்விகளான ஜல்லிக்கட்டு , நெடுவாசல், ஊடக அனுபவம், செய்தி கள  அனுபவம்  போன்ற வினாக்களுக்கு எளிமையாக மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியில் தனது நண்பர்கள்அரிகேசவநல்லூர்  திரு. சக்திவேல், வெங்கடேஸ்வரன், வீரவநல்லூர் ஐயப்பன்  மற்றும்  பாலமுரளி ஆகியோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். NEWS 7 தமிழ் செய்தி தலைமை செய்தியாளரும்  எனது நண்பருமான திரு.செந்தில்வேலுக்கும் எனது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.ராம் சந்தர்
தலைமையாசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்










வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சுற்றுச் சூழல் மன்றம் - மரம் நடு விழா

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி H .K . சங்கர சுப்பிரமணிய அய்யர் -மீனாட்சி அம்மாள்  நினைவு விளையாட்டு மைதானத்தில்  சுற்றுச்  சூழல் மன்றம்  சார்பில்  மரம் நடு விழா  நடைபெற்றது.  பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். விளையாட்டு மைதானத்தில் மொத்தம்  25 மரங்கள் நட திட்டமிட்டு முதற்கட்டமாக 7 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இன்று அமைந்தது. விழாவிற்காக உழைத்த எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.ஜேஸ்  மாலா , திருமதி. முத்து செல்வி,திருமதி. மணிமேகலை , செல்வி. இ ன்பரசி சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ம. ராம் சந்தர்
தலைமையாசிரியர்




புதன், 15 பிப்ரவரி, 2017

கனவு...நனவாகிறது.....

கனவு...நனவாகிறது.....

எம் பள்ளி செயலர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கனவான பெரிய விளையாட்டு மைதானம், நிரந்தர விழா மேடை  அமைக்கும் பணி  இன்னும் இரு நாட்களில்  நிறைவடைகிறது.

இப்பணி தொடங்கிய நாளிலிருந்து மிகவும் ஆர்வமுடன்  ஊக்கமளித்து வரும் எம் பள்ளி செயலர் திரு.டி.வி . சுப்பிரமணியன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினரும் எம் பள்ளியின் மூத்த ஆசிரியருமான திரு. இரா. மணி அவர்கள் , மற்றும் வீரவநல்லூர் அல் பா  முஹம்மது ஹுசைன் அறக்கட்டளையின் தலைவர் திரு. இப்ராஹிம் அவர்களுக்கும்  தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல் பா  முஹம்மது ஹுசைன் அறக்கட்டளையின் தலைவர் திரு. இப்ராஹிம்  அவர்கள் எம் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகளும், பரிசுகளும் வழங்கிக்கொண்டே வருகிறார்கள். மைதான வேலையைக் கூறிய உடன் இன்முகத்தோடு உடனடியாகப் பொருளுதவியும் அளித்துள்ளார்கள். அன்னாருக்கு செயலர் ,தலைமையாசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



மேலும் மைதானத்தில் மரக்கன்றுகள் நட  திட்டமிட்டுள்ளோம்.

பெரியோர்களின் பொருளுதவியுடன்  மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய அனைத்து  விளையாட்டு உபகரணங்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். உதவும் கரங்களுக்காகக் காத்திருக்கிறோம்.

வரும் மார்ச் மாதம் விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டுவிழா நடத்த உள்ளோம். எம் மாணவர்களின் தனித்திறனைக் காண வருகை தர வேண்டுகிறோம்.
எம் கனவு...நனவாகிறது.....











செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தின் நிறைவு விழா

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தின் நிறைவு விழா  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் இன்று  நடைபெற்றது. விழாவிற்கு  பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் தலைமைவகித்தார் .பாப்பாக்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர்  திருமதி.. சோபியா மெர்சி ஆக்னஸ்  அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திரு. ம . ராம் சந்தர் வரவேற்புரை ஆற்றினார் . அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் திருமதி. சங்கரி , திருமதி. சங்கீதா, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. ஜேஸ் மாலா  மற்றும் இப்பள்ளி மாணவிகள் ஆகியோர்  பள்ளிப்பரிமாற்றுத்திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி சார்பாக அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு  நினைவுப்பரிசினை பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்கள் . மேலும் இரு பள்ளி மாணவிகள் அனைவருக்கும்  ஆங்கில அகராதி பரிசு வழங்கப்பட்டது.  பின் கண்காட்சியினை பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் அவர்கள் திறந்து வைத்தார்கள் . பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் அவர்கள் , மேற்பார்வையாளர் , திரு























மதி. அமுதவல்லி மற்றும் திருமதி சங்கீதா  ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். பிற பள்ளி மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியினைப் பார்வையிட்டார்கள் . எம் பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள்  கலை நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்து  சிறப்புரை ஆற்றினார்.  மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு செயலர் அவர்கள் பரிசுகள் வழங்கி  பாராட்டினார்கள். பள்ளிப்பரிமாற்றுத் திட்டத்தில் எம் பள்ளியினை இணைத்ததற்கு கல்வித்துறை அதிகாரிகளுக்கு எம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. முத்து செல்வி , திருமதி. ஜேஷ் மாலா மற்றும் நம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.மணிமேகலை, செல்வி.இன்பரசி ஆகியோரின் ஒத்துழைப்பினால்  இன்றைய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பள்ளி பரிமாற்றுத்திட்டம்- அறிவியல் கண்காட்சி

அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்   பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின்  நிறைவு நாளில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் உயர்திரு. ஜெயராஜ் அவர்கள்  திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்கள்.  பள்ளி பரிமாற்றுத்திட்டத்தில் பங்குபெற்ற AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடி பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தில் கலந்து கொண்ட அனுபவங்களை  கேட்டறிந்தார்கள் . இரு பள்ளி மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்து பாராட்டினார் . அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்ற படைப்புகளில் சிறந்த இரு படைப்புகளை அளித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  கண்காட்சியினை  பிற பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் கண்டு களித்தனர். பின்  கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  நிறைவு விழாவினை  AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  உதவி தலைமையாசிரியர் திரு. பாலகிரு ஷ்ணன்  திட்ட பொறுப்பாசிரியர்கள்  திருமதி. சங்கரி , திருமதி.சங்கீதா , திரு. ஹரிகிருஷ்ணன்    ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள்  திருமதி.முத்துச்செல்வி , திருமதி. ஜேஸ் மாலா   ஆகியோர் கலந்து  கொண்டனர் .