பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம்

 பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் தலைமை வகித்தார்கள். முதல் கட்டமாக 17 மாணவர்களுக்கு இன்று சேமிப்பு கணக்கு துவங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகத்தினை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினைச் சேர்ந்த திரு. அய்யப்பன்(9994760712) அவர்கள் செய்திருந்தார்கள்.




 

வியாழன், 15 பிப்ரவரி, 2024

புத்தாண்டுப்பரிசாக எம் பள்ளி நூலகத்திற்கு 80 தமிழ் நூல்கள்மற்றும் 80 ஆங்கில நூல்கள்

 2024 புத்தாண்டுப்பரிசாக எம் பள்ளி நூலகத்திற்கு 80 தமிழ் நூல்கள் மற்றும் 80 ஆங்கில நூல்கள் வழங்கிய மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


திருநெல்வேலி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசு

 

திருநெல்வேலி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசுகள் பெற்ற நம் பள்ளி மாணவர்கள் பாலமுருகன்,பகவதிபிரியா,
காவியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....
வெற்றிகள் தொடரட்டும்...



 

30 வகுப்புகளில் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் பேச வைத்த sampoorna shikshaa

 

30 வகுப்புகளில் 6,7,8 ம் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் பேச வைத்த sampoorna shikshaa விற்கு மனமார்ந்த நன்றிகள்....
ஒவ்வொரு மாதமும் இனி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மற்றும் 4,5 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க சம்மதம் தெரிவித்த sampoorna shikshaa விற்கு மனமார்ந்த நன்றிகள்....
இந்த அரிய வாய்ப்பினை எம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கின்னஸ் சாதனையாளர் Venkatraman K Dubaii Ganapathy Subramanian அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
பயிற்சி அளித்த sampoorna shikshaa தன்னார்வல ஆசிரியர்களுக்கும் ஒருங்கிணைப்பாளருக்கும் நன்றிகள்
முழு ஒத்துழைப்பு நல்கிய எம் பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றிகள்...