பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 18 ஏப்ரல், 2018

கலை அருவி-பரிசு வழங்கும் விழா

பாப்பாக்குடி சரக அளவில் நடைபெற்ற  கலை அருவி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள் ..













SMART CLASS- demo to Parent

இன்று நமது பள்ளியில்  பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு திறன் வகுப்பறையின் மூலம் பாடம் நடத்தி காண்பிக்கப்பட்டது.





ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

முன்னாள் மாணவரின் மகிழ்ச்சி

இன்றுமாணவர் சேர்க்கைக்கு எம் பள்ளி ஆசிரியர்களுடன் சென்றிருந்தோம்.. எம் பள்ளியின் முன்னாள் மாணவர்(Mr.Manohar) ,''எங்கள் குடும்பத்தில் மூன்று மருத்துவர்கள் உள்ளார்கள்.. நாங்கள் அனைவரும் இந்து நடுநிலைப்பள்ளியில் பயின்றவர்கள்... பள்ளியின் முன்னேற்றத்தினைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன்''...என்று கூறியது எங்களுக்கு மகிழ்வான தருணமாக அமைந்தது....

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நன்றி....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க எங்களைத் தூண்டிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப.சந்திரசேகர் அவர்களுக்கும், முதன்முறையாக ஸ்மார்ட் போர்டினைப் பற்றிக் கற்றுக்கொடுத்த அன்பு சகோதரர் திரு. தங்கராஜ் அவர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்....



அரசு உதவிபெறும் பள்ளியின் சிறப்பம்சங்கள்

அரசு உதவிபெறும் பள்ளியின் சிறப்பம்சங்கள்

எம் மாணவர்களின் யோகா பயிற்சியினைக் காணுங்கள்....

எம் மாணவர்களின் யோகா பயிற்சியினைக்  காணுங்கள்....












சனி, 7 ஏப்ரல், 2018

திறன்வகுப்பறை(SMART CLASS) திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது ஆண்டுவிழா 06.04.2018

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் முப்பெரும்விழா (திறன்வகுப்பறை திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது  ஆண்டுவிழா ) மிகச்சிறப்பாக நடைபெற்றது.  விழாவிற்கு பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil தலைமை வகித்தார். நம் பள்ளியின் செயலர் திரு.டி .வி .சுப்பிரமணியன்  மற்றும் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி வரவேற்புரை ஆற்றினார் . தலைமை ஆசிரியர் திரு. ம. ராம் சந்தர்  ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் . பள்ளியின் திறன் வகுப்பறையினை(SMART CLASS)  Dr . நா. ராமசுப்பிரமணியன் -நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். கணிப்பொறி வகுப்பறையினை வீரவநல்லூர் அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil தலைமையுரை ஆற்றினார் .  



























Dr . நா.ராமசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் திரு.டி .வி .சுப்பிரமணியன் , பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இரா. மணிஅல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் ,திரு. முஹம்மது அலி ஜின்னா , திரு. ராமகிருஷ்ணன் ,, ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு .S .S . ரெங்கன் , பட்டதாரிஆசிரியர் திரு. இரா. பாலசுப்பிரமணியன் , பாப்பாக்குடி இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்தையா ராஜேந்திரன், கலிதீர்த்தான்பட்டி முத்தமிழ் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு. பரமராஜ்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களின் யோகாசனப்பயிற்சி  அனைவரையும் மகிழச்செய்தது. ஆசிரியை திருமதி. செ .ஜேஸ் மாலா  நன்றியுரை கூறினார். ஆசிரியை திருமதி. மணிமேகலை நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எம்பள்ளியின் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி , திருமதி .கோமதி யோகா ஆசிரியர் திரு. ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.