பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

HMS HARIKESAVANALLUR

VILAGAM PUPS HM Mr.NATARAJAN SPEECH,at HINDU MIDDLE SCHOOL HARIKESAVANALLUR

ROTARY INTERACT CLUB

நமது அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் சார்பில் ROTARY INTERACT CLUB ஆரம்ப விழா , உலக எழுத்தறிவு தின விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு. ம . ராம் சந்தர் வரவேற்புரை ஆற்றினார் .விழாவிற்கு ரோட்டரி வேணுவனம் தலைவர் திரு.. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் திரு. கோமதி சங்கர் முன்னிலை வகித்தார். பொருளாளர் திரு. முத்து , துணை தலைவர் திரு. சுபா சங்கர் , மூத்த உறுப்பினர் திரு. பாக்கியம் , ரோட்டரி முன்னாள் செயலரும் விளாகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .






ROTARY INTERACT CLUB தலைவராக செல்வி. முப்பிடாதி, செயலராக சுபாஷ் சுப்பிரமணியன், பொருளாளராக பத்ம பிரியா ஆகியோருக்கு ரோட்டரி 3212 மாவட்ட துணை ஆளுநர் திரு. ராயல் சுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற மாணாக்கர்களுக்கு வில்லைகள் அணிவிக்கப்பட்டது. பள்ளியில் பயிலும் 107 மாணாக்கர்களுக்கும் மிகவும் தரமான சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியை திருமதி முத்து செல்வி நன்றி கூறினார். நாட்டுப் பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி,திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.