பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பள்ளிப்பரிமாற்றுத்திட்டம்

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தில் இன்று சமூக அறிவியல் பாடம் நடத்தப்பட்டது. முதல் நிகழ்வாக  தலைமை ஆசிரியர் திரு. ம. ராம் சந்தர்  அம்பாசமுத்திரம் AVRMV அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றுப்பேசினார். பின்  மாணவிகளுக்கு வார்த்தை விளையாட்டு நடத்தப்பட்டது. ஆசிரியைகள் திருமதி. முத்து செல்வி, இன்பரசி  ஆகியோர் சமூக அறிவியல் பாடம் நடத்தினர். தமிழக அதிசயங்கள், லெமுரியா கண்டம் மற்றும் கல்லணை கட்டப்பட்ட விதம் குறித்த குறும்படங்கள்  மாணவிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. உள்ளாட்சி மாதிரி தேர்தல் நடத்தப்பட்ட து.  சாலைவிதிகள்  பற்றிய வில்லுப்பாட்டு,தேசிய ஒருமைப்பாடு குறித்த கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் நிகழ்த்தினார்கள்.
மதியம் பொங்கல் விழா நடைபெற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர். பிற்பகல் அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோயிலுக்கு களப்பயணம்  அழைத்துச்செல்லப்பட்டு கட்டிடக்கலை, சிற்பக்கலையை கண்டு களித்தனர். பின்  மாணவர் களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவிகளுக்கு புதிய நட்புகள் கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினர். ஆசிரியர்களுக்கு புதிய அனுபவங்களும், கற்பித்தல் உத்திகளும் கிடைக்கப்பட்டதாகக் கூறினர் . தேசிய கீதம் இசைக்க வகுப்பு நிறைவடைந்தது. அம்பாசமுத்திரம் AVRMV அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிப்பரிமாற்றுத் திட்ட பொறுப்பாசிரியர் திருமதி. சங்கரி, திருமதி. சங்கீதா  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள்  திருமதி முத்துச்செல்வி, திருமதி. ஜேஸ் மாலா  ஆகியோர் கலந்து கொண்டனர்.








பொங்கல் விழா

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு பொங்கல் விழாவினை எம் பள்ளிக்கு பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின் படி வருகை தந்த அம்பாசமுத்திரம்  AVRMV  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் இணைந்து கொண்டாடியது மிக மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.விழாவினை சிறப்பாக நடத்திய எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி முத்துச்செல்வி, திருமதி . ஜே ஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. இன்பரசி  சத்துணவு அமைப்பாளர்.திருமதி. மாரியம்மாள் மற்றும் சத்துணவு உதவியாளர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினத்தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது பல பணிகளுக்கு இடையிலும் நம் பள்ளி பொங்கல் விழாவினை  புகைப்படம் எடுத்த அருமை நண்பர் திரு.வரதரராஜன் (எஸ்.வி. ராஜா ஸ்டுடியோ வீரவநல்லூர்) அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ம. ராம் சந்தர் , தலைமையாசிரியர்