பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 30 மார்ச், 2019

சமையல் எரிவாயு

அரிகேசவ நல்லூர்இந்து நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் ரூபாய் 4800 மதிப்புள்ள சமையல் எரிவாயு அடுப்பினை வழங்கினார்கள்.

செவ்வாய், 26 மார்ச், 2019

தேடி வந்த நேர்மை

தமிழக காவல்துறையில் பல விருதுகள் பெற்று  மிகச்சிறப்பாகப் பணியாற்றி வரும் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. சாம்சன் அவர்கள் இன்று நம் பள்ளிக்கு வருகை தந்து  மாணவர்களிடம் கலந்துரையாடினார். கையெழுத்துப்பயிற்சி ,  வகுப்பறை மேலாண்மை , பள்ளி வளாக சுத்தம், மாணவர்களிடம் பகிர்ந்தளிக்கும் பண்பினை வளர்த்தல்,தன்சுத்தம், சமூகப்பண்பினை வளர்த்தல்,ஸ்மார்ட் வகுப்பறை , களப்பயணம் .... இது குறித்து அவர் பேசியது ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது.  அவரது ஒவ்வொரு வார்த்தையும் அவரது அனுபவத்தினையும், பக்குவத்தினையும், உற்றுநோக்கலையும் எங்களுக்கு உணர்த்தியது. மாணவர்களுடன் சத்துணவு உண்டது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.சாம்சன் அய்யாவைப்பற்றி சமூக வலைத்தளங்களில் படித்திருக்கிறோம். இன்று நேரில் பார்க்க வாய்ப்பளித்த  அய்யாவிற்கு  நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்த அய்யாவிற்கு எங்களின் சல்யூட்...



சனி, 16 மார்ச், 2019

மாணவர் சேர்க்கை

2019-20ம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான பிரச்சாரம் இன்று துவங்கப்பட்டது.