பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 29 நவம்பர், 2021

திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும்   மாவட்டத்தில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு  மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள்  விடுமுறை அறிவித்து *மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு , இ.ஆ.ப., அவர்கள்* உத்தரவிட்டுள்ளார்கள்.

திங்கள், 8 நவம்பர், 2021

வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளி

 திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள  வில்வித்தை சங்கம் (Tirunelveli Youth Field Archery Association)  சார்பில்   நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வில்வித்தை பயிற்சி தமிழக அரசு பள்ளிகளில் விளையாட்டுப்பயிற்சி அளிக்க தளர்வு வழங்கிய பின்னர் தொடங்க உள்ளது.  திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள  வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association)  செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க இருக்கிறார்கள்...

நம் மாவட்டத்தில் முதன்முறையாக வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளியாக நம்  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியை  தேர்ந்தெடுக்க 

திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள  வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association)  செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்களிடம் கேட்டுக்கொண்டதை உடனடியாக ஏற்றுக்கொண்டு  பயிற்சி அளிக்க சம்மதித்த திரு. ப. பாரதிராஜா அவர்களுக்கு  நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம் 

வில்வித்தை பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு  தொடர்பு கொள்ள 6369030091




We help to Focus your Target 

 Tamilnadu Youth Field Archery Association ® . Recognized and Affiliated Member of Field Archery Association of India (FAAI) . (FAAI) Member of International Field Archery Association . Member of The Association for International Sports for All (TAFISA) Recognized International Olympic Committee . (FAAI) Recognized by: School Games Federation of India .              +91 6369030091







செவ்வாய், 2 நவம்பர், 2021

மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

 நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை  ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள் .  அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன்  துணைத்தலைவர் திரு.P.S.K. மாரியப்ப பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் திரு.சோழமுடி  ஆகியோர் மாணவர்களின் வரவேற்பு விழாவில் கலந்து  மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் அவர்கள் மாணாக்கர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்கள் .















வியாழன், 28 அக்டோபர், 2021

விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்

 2021-22ம் கல்வியாண்டின்  இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும்  நோட்டுப்புத்தங்கங்களை நம் பள்ளி மாணவர்களுக்கு இன்று பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed., M.Phil., அவர்கள் இன்று வழங்கினார்கள் 

விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்

 




 

புதன், 27 அக்டோபர், 2021

தனித்துவமிக்க தலைமையாசிரியர்விருது

சர்வீஸ் டூ சொசைட்டி டிரஸ்ட்மற்றும் வலைதமிழ் டி வி இணைந்து வழங்கிய தனித்துவமிக்க தலைமையாசிரியர் விருதினை பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சு.கல்யாணி., M.Sc .,M.Phil.,M.Ed.,M.Phil.,அவர்கள் இன்று வழங்கினார்கள்.. விருது அளித்த சர்வீஸ் டூ சொசைட்டி டிரஸ்ட் அன்புசகோதரர் ரவிசொக்கலிங்கம் சார் மற்றும் வலைதமிழ் டி வி பார்த்தசாரதி சார் அவர்களுக்கும்எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 25 அக்டோபர், 2021

சனி, 2 அக்டோபர், 2021

நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழு சங்கம நிகழ்வு

நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழு சங்கம நிகழ்வில் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்..
நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

முனைவர் பட்டம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலருக்கு பாராட்டு

 

பாப்பாக்குடி சரக தலைமையாசிரியர்கள் கூட்டம் இன்று பாப்பாக்குடி வட்டார வள மையத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். பாப்பாக்குடி வட்டாரக்  கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . முனைவர் பட்டம் பெற்றமைக்கு  சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்ளை பாப்பாக்குடி வட்டாரக்  கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.  வட்டார வள மையம் சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள், பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், சுகாதார நடவடிக்கைகள், ஆசிரியர்களின் கடமைகள் ஆகியன குறித்து  மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களும் எடுத்துரைத்தார்கள் 

 

 












வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தனித்துவமிக்க தலைமையாசிரியர்

 தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பளித்த S 2 S  நிறுவனர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும் நிகழ்வினை தொகுத்து வழங்கிய திரு. அன்பழகன் அவர்களுக்கும் வலைத்தமிழ் தளத்திற்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் 



 

 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மொபைல் பாரடைஸ் வாழ்த்து

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்கு  மொபைல் பாரடைஸ் சார்பாக அன்பு சகோதரர் திரு.   கணேஷ் அவர்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு  மகிழ்வும் நன்றிகளும்....

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

தந்தை பெரியாரின் பிறந்த தின சமூக நீதி நாள் உறுதிமொழி

 தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களால் எடுக்கப்பட்டது





வியாழன், 16 செப்டம்பர், 2021

வாழ்த்து

அன்பு சகோதரரும் கணபதி தொடக்கப்பள்ளியின் ஆசிரியருமான திரு. குமார் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து  வாழ்த்தினார்கள்.அன்னாருக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 செப்டம்பர், 2021

பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள்

பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி  நம் அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி  சங்கரசுப்பிரமணிய அய்யர் மீனாட்சிஅம்மாள் நினைவுவிளையாட்டு த் திடலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.