பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 7 ஏப்ரல், 2018

திறன்வகுப்பறை(SMART CLASS) திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது ஆண்டுவிழா 06.04.2018

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் முப்பெரும்விழா (திறன்வகுப்பறை திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது  ஆண்டுவிழா ) மிகச்சிறப்பாக நடைபெற்றது.  விழாவிற்கு பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil தலைமை வகித்தார். நம் பள்ளியின் செயலர் திரு.டி .வி .சுப்பிரமணியன்  மற்றும் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி வரவேற்புரை ஆற்றினார் . தலைமை ஆசிரியர் திரு. ம. ராம் சந்தர்  ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் . பள்ளியின் திறன் வகுப்பறையினை(SMART CLASS)  Dr . நா. ராமசுப்பிரமணியன் -நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். கணிப்பொறி வகுப்பறையினை வீரவநல்லூர் அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil தலைமையுரை ஆற்றினார் .  



























Dr . நா.ராமசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் திரு.டி .வி .சுப்பிரமணியன் , பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இரா. மணிஅல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் ,திரு. முஹம்மது அலி ஜின்னா , திரு. ராமகிருஷ்ணன் ,, ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு .S .S . ரெங்கன் , பட்டதாரிஆசிரியர் திரு. இரா. பாலசுப்பிரமணியன் , பாப்பாக்குடி இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்தையா ராஜேந்திரன், கலிதீர்த்தான்பட்டி முத்தமிழ் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு. பரமராஜ்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களின் யோகாசனப்பயிற்சி  அனைவரையும் மகிழச்செய்தது. ஆசிரியை திருமதி. செ .ஜேஸ் மாலா  நன்றியுரை கூறினார். ஆசிரியை திருமதி. மணிமேகலை நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எம்பள்ளியின் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி , திருமதி .கோமதி யோகா ஆசிரியர் திரு. ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

எம் பள்ளியின் சிறப்பம்சங்கள்


அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்....



SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

நம் பள்ளிக்கு ரூபாய் 3000 மதிப்பில் UPS வழங்கிய அன்புத்தம்பி ஜெய்சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி......

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 3000/-அளித்த உடையாம்புளி இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.J. தாமஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

நம் பள்ளியின் ஆசிரியர் திரு. ரெங்கன் அவர்களின் புதல்வர் திரு. பாலா அவர்கள் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/- அளித்துள்ளார்கள்.அன்னாருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

நம் பள்ளியின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் தனி அக்கறை கொண்டு முன்னேற்றத்தினைக் கண்டு மகிழும் எங்களது அன்பு சகோதரர் அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. இப்ராஹிம் அவர்கள் ஸ்மார்ட் வகுப்பறைக்குரிய PROJECTOR வழங்கியுள்ளார்கள். எங்கள் சகோதரருக்கு நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்..

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 5000/-அளித்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்..

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

நம் பள்ளிக்கு மிக மிகக் குறைந்த விலையில் 3 கணிப்பொறி மேஜைகள் வழங்கிய வீரவநல்லூர் சாய் சந்தோஷ் உரிமையாளரும் எங்களது நண்பருமான திரு.ப. ஐயப்பன் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

நம் பள்ளிக்கு LED MONITOR வழங்கிய அம்பாசமுத்திரம் ஸ்மார்ட் சிஸ்டம் சுரேஷ்குமார் அவர்களுக்கு நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 5000/-அளித்த எங்களது அன்புத்தம்பி் லெட்சுமி நாராயணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்..

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 5555/-அளித்த எங்களது அன்பு நண்பர் திரு. RANJITHஅவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 5000/-அளித்த எங்களது அன்பு நண்பர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்..

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

தனது பள்ளிப்படிப்பினை அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று இன்று மேலைநாட்டில் மூன்று முதுகலை பட்டத்தினை நிறைவு செய்து பல மொழிகளைப் பயின்று உலகில் 35 நாடுகளில் பணிபுரிந்து தற்போது நிதியியல் மேலாளராகப் பணிபுரிந்து வரும் அருமை தம்பி திரு. விஜய் ராஜேந்திரன் அவர்கள் நம் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/_ அளித்துள்ளார்கள்... நன்றி தம்பி....

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

நம் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 50000/- அளித்த திரு.ராமசுப்பிரமணியன் மற்றும் திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் கேட்ட உடனேதனது சொந்த ஊரான அரிகேசவ நல்லூரில் இயங்கி வரும் பள்ளிக்கு பெரும் உதவி செய்த அன்புள்ளங்களை வணங்குகிறோம்...

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 3000 அளித்த அன்பு நண்பர் திரு.கோமதி விநாயகம் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்...