பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

புதன், 26 டிசம்பர், 2012

OUR SECRETARY

எங்கள் பள்ளியின் முகவர்  மற்றும் செயலர்

திரு. டி வி. சுப்பிரமணியன் மற்றும்  திருமதி. கீதா சுப்பிரமணியன் 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

ANJALI

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

எங்களை விட்டு பிரிந்த எம் பள்ளி ஆசிரியர் திரு. அபூபக்கர்  அவர்களுக்கு எங்களது அஞ்சலியை சமர்பிக்கிறோம். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

DENGUE AWARENESS PROGRAMME

19.11.2012 அன்று முக்கூடல் சுகாதார ஆய்வாளர் மற்றும் நம் பள்ளி மாணவர்கள் இணைந்து அரிகேசவநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வு  பிரசாரங்கள் மேற்கொண்டனர்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

VIJAYADASAMI


அனைவருக்கும் விஜயதசமி  நல வாழ்த்துக்கள். இன்று  நமது  பள்ளியில் சரஸ்வதி பூஜை  சிறப்பாக  கொண்டாடப்பட்டது .

வெள்ளி, 13 ஜூலை, 2012

THANKS

நம் பள்ளிக்கு  கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்ய ரூபாய் இரண்டரை லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு . இசக்கி சுப்பய்யா அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

சனி, 7 ஜூலை, 2012

THANKS

நம் பள்ளி மாணாக்கர்களுக்கு   பள்ளி  நாட்காட்டியினை  இலவசமாக அளித்த  வீரவநல்லூர் சண்முக லக்ஷ்மி கல்வி அறக்கட்டளை திரு.. பகவதி கணேஷ் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் , மாணவ மாணவியரின் சார்பில் நன்றியை தெரிவித்து  கொள்கிறோம்..

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நன்றி நன்றி நன்றி

நம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் அளித்த திரு. ராஜேஷ ராஜன் ( மும்பை) அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி நன்றி நன்றி



நம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகளுக்காக ரூபாய் பத்தாயிரம் அளித்த திருநெல்வேலி காஜா பீடி நிர்வாகத்திற்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மாணவ மாணவிகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

வெள்ளி, 9 மார்ச், 2012

அறிவியல் கண்காட்சி







நம் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் திரு. டிவி. சுப்பிரமணியன் அவர்கள் மாணவர்களின் கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். ஆசிரியர் இரா. மணி அவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் தினம் குறித்தும் அறிவியல் செய்திகள் குறித்தும் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , ஜெஷ்மாலா ,மணிமேகலை , வைஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

நன்றி



நம் பள்ளி மாணாக்கர்களுக்கு டெஸ்க் மற்றும் பெஞ்ச் பெற்று தந்த மனோகரன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

திங்கள், 16 ஜனவரி, 2012

கிராமக்கல்விக்குழு ,







எங்கள் பள்ளி கிராமக்கல்விக்குழு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சந்தர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி ஜெயலக்ஷ்மி முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பூதலிங்கம் பிள்ளை சிறப்புரை ஆற்றினார். மாணாக்கர்கள் கவிதை வாசித்தல், தமிழ் ஆங்கிலம் செய்திதாள்கள் வசித்து காட்டினர்.