பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 14 மே, 2022

சர்விஸ் டு சொசைட்டி ரவி சொக்கலிங்கம் அவர்களின் தன்னம்பிக்கை உரை...

 அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் 2021-22ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு  முடித்து 9 ம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களிடம்  காணொளிக்காட்சி மூலம் சர்விஸ் டு சொசைட்டி ரவி சொக்கலிங்கம் அவர்கள்  தன்னம்பிக்கை உரையாற்றினார்கள் . தானும் அரசுப்பள்ளியில் பயின்று உயர்த்த இடத்தினை அடைந்த தன் வாழ்க்கையனுபவத்தினை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு மிகவும் அழகாக மாணவர்களுக்குப்புரியும் வண்ணம் பதிலளித்தார்கள் .




 

2021-22 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா

 2021-22ம் கல்வியாண்டில்  பயின்ற   எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா  13.05.2022 அன்று  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின்  ஹரிநாராயணன் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.  விழாவில் பள்ளி செயலர்  திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் . நினைவுப்பரிசினை  பொறியாளரும் சர்வீஸ்  டு சொசைட்டி நிறுவனருமான ரவிசொக்கலிங்கம் அவர்களும் பள்ளிநிர்வாகமும் இணைந்து  மாணவர்களுக்கு வழங்கினார்கள் . விழாவில் தலைமையாசிரியர் ராம் சந்தர் ,ஆசிரியர்கள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. அமுதவல்லி,திருமதி.ஜேஸ் மாலா ,திருமதி.முருகதாய்,திருமதி.கோமதி,திருமதி.ஜெயலட்சுமி,திருமதி.சண்முகத்தில்லை ,திருமதி.மணிமேகலை ,திருமதி.ப்ரேம்கலா ,செல்வி.முத்துலெட்சுமி , டேக் வாண்டே  மற்றும் வில்வித்தைப் பயிற்சியாளர் திரு.பாரதிராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசினர் .எட்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். விழாவில் தினம் ஒரு திருக்குறளினைத் தினமும் வழங்கும் ஆசிரியர் செல்வி. முத்துலெட்சுமிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.