பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 15 டிசம்பர், 2022

ஆதார் சிறப்பு முகாம்

 ஆதார் சிறப்பு முகாம் 

வீரவநல்லூர் அஞ்சல்துறையினர்  அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வைத்து 14.12.20222மற்றும் 15.12.2022 ஆகிய இரு நாட்கள்   ஆதார் சிறப்பு முகாமினை நடத்தினர். முகாமினை வீரவநல்லூர் போஸ்ட்மாஸ்டர் திருமதி.சூரியகலா  அவர்கள் துவக்கிவைத்தார்.அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் பதிவுசெய்தல் ,திருத்தம்  செய்தல் , கைரேகை மற்றும் கண்விழி பதிவு செய்தல்  போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அஞ்சல் அலுவலர்கள் திரு.மணிகண்ட வடிவேலன் ,திரு.சக்திவேல் ஆகியோர் திருத்தங்களை மேற்கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.










ஞாயிறு, 11 டிசம்பர், 2022

சிறந்த பள்ளிக்கானவிருது,கல்வி சிந்தனையாளர் விருது-திருநெல்வேலி க்ரீன் சிட்டி மற்றும் டீம் ட்ரஸ்ட்

 திருநெல்வேலி க்ரீன்  சிட்டி மற்றும் டீம் ட்ரஸ்ட் இணைந்து விருது 2022 விழா 10.11.2022 சனிக்கிழமை திருநெல்வேலி  விஜயா கார்ட்டனில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு லயன்.பொன் .திருமலைமுருகன் அவர்கள் தலைமைதாங்கி விழாவினை சிறப்பாக நடத்தினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு. திருப்பதி அவர்கள் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு  விருது வழங்கினார்கள். இதில்  சிறந்த பள்ளிக்கான விருதினை அரிகேசவநல்லூர் இந்து நடு  நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.  ம.ராம்சந்தர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொண்டார். மேலும்  சிறந்த கல்வி சிந்தனையாளர் விருதினை அரிகேசவநல்லூர் இந்து நடு  நிலைப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.செ .ஜேஸ் மாலா அவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கினார்.225க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தூய சவேரியார் கல்லூரி முதல்வர் , நெல்லை அரசு ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.விழாவினை மிக சிறப்பாக லயன்.பொன் .திருமலைமுருகன் அவர்களை அனைவரும் பாராட்டினர்