ஆதார் சிறப்பு முகாம்
வீரவநல்லூர் அஞ்சல்துறையினர் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வைத்து 14.12.20222மற்றும் 15.12.2022 ஆகிய இரு நாட்கள் ஆதார் சிறப்பு முகாமினை நடத்தினர். முகாமினை வீரவநல்லூர் போஸ்ட்மாஸ்டர் திருமதி.சூரியகலா அவர்கள் துவக்கிவைத்தார்.அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் பதிவுசெய்தல் ,திருத்தம் செய்தல் , கைரேகை மற்றும் கண்விழி பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அஞ்சல் அலுவலர்கள் திரு.மணிகண்ட வடிவேலன் ,திரு.சக்திவேல் ஆகியோர் திருத்தங்களை மேற்கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

.jpeg)

.jpeg)


.jpeg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக