பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் -TNTP

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் டிஎன்டிபி (தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்)
என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்டிபி இணையதளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், புதிய பாட திட்டத்திற்கான கற்றல், கற்பித்தல், பயிற்சி வளங்கள், இயங்குறு பாடங்கள் போன்றவை மிக எளிமையான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் உள்ள வளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக யூசர் ஐடி வழங்கப்பட்டுள்ளது. யூசர் ஐடி பக்கத்தில் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பணியாளர்களின் விவரப்பதிவு பகுதியில் ஆசிரியர்கள் யூசர் ஐடி விவரம் இடம் பெற்றிருக்கும். ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக யூசர் ஐடி பெறலாம்.
 
மிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.இன்னும் பல Options படிப்படியாக வரும்.அதை பயன்படுத்த சில குறிப்புகள்.

நாம் ஏற்கனவே பள்ளிக்கு பயன்படுத்தும் EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும்.உங்களுடைய User name, Password ஐ குறித்துக்கொள்ளுங்கள்.

USERNAME என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம்.

PASSWORD என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும்.


பிறகு அந்த EMIS SITEல் இருந்து Logout செய்யவேண்டும்.

மீண்டும் EMIS website ல்( http://emis.tnschools.gov.in/ )உங்களுடைய User ID மற்றும் Password ஐ போட்டு Login செய்யவேண்டும்.

  உடனே Reset Password Option தோன்றும்.Password மாற்றிக்கொள்ளலாம்.

பிறகு உங்களது Profile Open ஆகும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். உங்களின் புகைப்படம் தோன்றும். அதற்கு கீழே TNTP Login என்ற Option தோன்றும். அதை Click செய்தால் TNTP Website open ஆகும். அதில் Acadamic Resources மற்றும் E-Books options தோன்றும். அதை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.நேரடியாக TNTP Website செல்லும் வழி

கீழ்கண்ட TNTP Link ஐ Click செய்யவும்.

https://tntp.tnschools.gov.in/lms/login/index.php

அதில் உங்களுடைய User ID மற்றும் Password ஐ போட்டு Login செய்யவேண்டும்.

அதில் Acadamic Resources மற்றும் E-Books options தோன்றும். அதை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தலைமையாசிரியர்களுக்கு இன்னும் User ID, Password Create செய்யப்படவில்லை.
 
 
Tamil Nadu Teachers Platform