பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 26 ஜனவரி, 2019

நன்றி

நன்றி
 நம் பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட  முதல் பங்களிப்பு எங்களது  பங்களிப்பு என்று மிகுந்த உரிமையுடன் கூறி நன்கொடையாக ரூபாய் 50001/- அளித்த வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.M.H.M. இப்ராஹிம் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்


70 வது குடியரசு தின விழா

70 வது  குடியரசு தின விழா  நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் மிக சிறப்பாக நடைபெற்றது. வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி  அறக்கட்டளையின் தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து  கொண்டு தேசிய கொ டி ஏற்றினார் . நம் பள்ளியின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 50000/-ற்கான காசோலையினை  அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.M.H.M . இப்ராஹிம் அவர்களின் துணைவியார் திருமதி. சல்மா இப்ராஹிம் அவர்களும் , தி ரு. முஹம்மது அலி ஜின்னா அவர்களும் இணைந்து  தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள். முன்னாள் வணிக வரித்துறை இணை இயக்குனர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் அனைத்து  ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஜெர்மனி நாட்டின் GE NET GMBH ன் நிர்வாக இயக்குனர் Dr.Carsten Ropeter அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளிக்கு வருகை

ஜெர்மனி நாட்டின் GE NET  GMBH ன் நிர்வாக இயக்குனர் Dr.Carsten Ropeter இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளியின் செயல்பாடுகள், கற்பித்தல் முறை, பள்ளி நேரம் வகுப்பறை செயல்பாடுகள் ஆகியவற்றை ஆர்வமுடன் கேட்டறிந்தார். அன்னருடன் GE NET  GMBH ன் Project&Sales Engineer  Mr. Venkatasubramanian,Chief Supervisor Mr.Artur Gur, Marketing Manager Mr. Chrisoph, Wintcare India pvt Ltd Technical Head Mr. Kalimuthu, Wintcare India pvt Ltd Quality Head  Mr. Sathish, நம் பள்ளியின்  செயலர் திரு. டிவி.சுப்பிரமணியன் ,ஆகியோர் வருகைபுரிந்தனர் .











ஞாயிறு, 13 ஜனவரி, 2019

லட்சியத்தை அடைவது எப்படி ?

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் லட்சியத்தை அடைவது எப்படி என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் பணியாற்றிவரும் மனிதவள மேம்பாட்டு நிபுணர் செல்வி. தீபா அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார் அவர்களுடன் பள்ளி செயலர் திரு டிவி சுப்பிரமணியன் மற்றும் பொறியாளர்கள் திரு . வெங்கடேஷ் திருமதி திவ்யா வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொறியாளர் திருமதி திவ்யா வெங்கடேஷ் அவர்கள் மாணவர்களிடம் தன்சுத்தம் குறித்தும்,திரு. வெங்கடேஷ் அவர்கள் மரம் வளர்த்தலின்அவசியம் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்

YOUTUBE LINKS:

MISS.DHEEPA SPEECH PART 1

MISS.DHEEPA SPEECH PART 2 

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பொங்கல் விழா


இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது..