70 வது குடியரசு தின விழா நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் மிக சிறப்பாக நடைபெற்றது. வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொ டி ஏற்றினார் . நம் பள்ளியின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 50000/-ற்கான காசோலையினை அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.M.H.M . இப்ராஹிம் அவர்களின் துணைவியார் திருமதி. சல்மா இப்ராஹிம் அவர்களும் , தி ரு. முஹம்மது அலி ஜின்னா அவர்களும் இணைந்து தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள். முன்னாள் வணிக வரித்துறை இணை இயக்குனர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக