புதன், 31 ஆகஸ்ட், 2016
புதன், 24 ஆகஸ்ட், 2016
வீரவ நல்லூர் அல்ஃபா முஹம்மது ஹுசைன் தொண்டு நிறுவனம்
இன்று நம் அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளிக்கு வீரவ நல்லூர் அல்ஃபா முஹம்மது ஹுசைன் தொண்டு நிறுவனம் சார்பில் திரு. இப்ராகிம் அவர்கள் மாணவர்களுக்கு கணிப்பொறி வழங்கினார்கள். அன்னாருக்கு நம் பள்ளி செயலர், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ம.ராம்சந்தர்
தலைமை ஆசிரியர்
இந்து நடு நிலைப்பள்ளி
அரிகேசவ நல்லூர்.
தலைமை ஆசிரியர்
இந்து நடு நிலைப்பள்ளி
அரிகேசவ நல்லூர்.
புதன், 17 ஆகஸ்ட், 2016
பள்ளிக்கு புதிய எல்.இ.டி டி.வி வழங்கிய எம் பள்ளி செயலர் திரு. டி.வி.சுப்பிரமணியன் அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ம.ராம்சந்தர்
தலைமையாசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி
ம.ராம்சந்தர்
தலைமையாசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி
திருநெல்வேலி ரோட்டரி க்ளப் வேணுவனம்
திருநெல்வேலி ரோட்டரி க்ளப் வேணுவனம் சார்பில்அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுத்தமாக கைகழுவுவதன் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் திரு.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.ரோட்டரி செயலர் திரு.கோமதிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.துணை ஆளு நர் திரு.ராயல் சுப்பிரமணியன்,துணைத்தலைவர் திரு.சுபாசங்கர் மூத்தஉறுப்பினர் திரு.பாக்கியம் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.மாணவர்களிடையே வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சோப் மற்றும் கைக்குட்டை வழங்கப்பட்டது. ஆசிரியர் திருமதி.அமுதவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியைகள் முத்துசெல்வி,ஜேஸ்மாலா,மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.
நம் பள்ளிக்கு 8செட் டெஸ்க் பென்சுகள் மற்றும் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய திரு.கணபதிசுப்பிரமணியன் அவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகம்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நம் பள்ளிக்கு தம் குடும்பத்தினருடன் வருகை தந்து மாணவர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து கலந்துரையாடி மாணவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய திரு.கணபதிசுப்பிரமணியன் அவர்களுக்கும் அன்னாரின் தந்தையார் திரு.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும்,திரு.கணபதி சுப்பிரமணியன் அவர்களின் துணைவியாருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















































