பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

தினம் ஒரு திருக்குறள் -3

 


 

தினம் ஒரு திருக்குறள் 

குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

இன்றைய பொன்மொழி  

நீங்கள் செய்யும் தர்மம்
ஒரு போதும் உங்கள்
செல்வதை குறைக்காது.

- நபிகள் நாயகம்

அறிவியல் துளிகள்  

அச்சுறுத்தும் 'நானோ' பிளாஸ்டிக்

வடக்கு அட்லாண்டிக் கடலில் 2.7 கோடி டன் 'நானோ' பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடல் உணவுச்சங்கிலியை பாதித்து கடல்வாழ் உயிரினங்களை அழிக்கும் திறன் கொண்டது. மேலும் மனித உடல் உறுப்புக்குள் ஊடுருவும் ஆபத்து மிக்கது என ராயல் நெதர்லாந்து கடல் ஆராய்ச்சி நிறுவனம், யுட்ரெட்ச் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு மைக்ரோமீட்டருக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் துகள், நானோ துகள் எனப்படுகிறது. இதை கண்ணால் பார்க்க முடியாது. பெரிய பிளாஸ்டிக் உடைவதில் இருந்து இந்த நானோ பிளாஸ்டிக் துகள் உருவாகிறது.

பொது அறிவு 

இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?

விடை: நீலகிரி தாஹ்ர் மான் 

பழமொழி 

இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

தினம் ஒரு திருக்குறள் -2

 


தினம் ஒரு திருக்குறள் 

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

கேட்டவர்‌ பலரும்‌ வெறுக்கும்படியாகப்‌ பயனில்லாத சொற்களைச்‌ சொல்லுகின்றவன்‌, எல்லோராலும்‌ இகழப்படுவான்‌.

இன்றைய பொன்மொழி  

துணிவு....இதில்தான் உங்களின்  மேதைத்தனம் ,அற்புதம் ,ஆற்றல்  என அனைத்தும்  புதைந்து கிடக்கின்றன ..... கதே 

அறிவியல் துளிகள்  

பூமிக்கு ஆறு நிலவுகள்

விண்கல், சிறுகோள் உள்ளிட்டவை பூமிக்கு அருகே வரும் போது அதை தற்காலிக சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம். இந்நிலையில் எந்த நேரத்திலும் பூமி ஆறு 'சிறிய நிலவுகளை' தற்காலிகமாக வைத்திருக்கலாம். இது அளவில் (6.5 அடி நீளம்) சிறியதாக இருப்பதால் பார்க்க முடியாது என ஹவாய் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. '2024 பி.டி.5' விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, 2024 செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் தற்காலிக நிலவாக சுற்றி வந்து, பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி அதன் சுற்றுப்பாதையில் சென்றது.

பொது அறிவு 

வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்

விடை: அகிலன்

பழமொழி 

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது

வியாழன், 31 ஜூலை, 2025

தினம் ஒரு திருக்குறள்

 

 


 தினம் ஒரு திருக்குறள் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது 

தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு ஆக முடியாது

இன்றைய பொன்மொழி  

உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்.  

அறிவியல் துளிகள்  

மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. மின்னலில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தளவு வெப்பம் கொண்ட மின்னல், மரத்தின் மீது பாயும் போது, மரத்தின் உட்பகுதியில் உள்ள நீர் முதலான பொருட்கள் ஆவியாகி விரிவடைந்து வெடிப்பது போன்ற வினை ஏற்படும். மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பாக இருப்பது அவசியம். 

பொது அறிவு 

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

பழமொழி 

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. 

 

 

செவ்வாய், 17 ஜூன், 2025

Art and Craft@v std students HIndu Middle School Harikesavanallur

 Art and Craft@v std students HIndu Middle School Harikesavanallur


























 

ஏழாம் வகுப்பு|முதல்பருவம் |தமிழ் 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

 ஏழாம் வகுப்பு|முதல்பருவம் |தமிழ் 

1.2 ஒன்றல்ல இரண்டல்ல


 

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி

இ) பரணி



2.வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்

ஆ) முகில்


3.‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல


4.‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்

அ) தந்து + உதவும்


5.ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்பு இல்லாத

இ) ஒப்புமையில்லாத


குறுவினா


1.தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும் எனக் கவிஞர் கூறுகிறார்.


2.‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ்பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு பலவாகும்.


சிறுவினா


1.தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள். அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

சிந்தனை வினா


1.தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

“அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா கூறுகிறது. மனிதன் வாழ்க்கையில் அடைய வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் என்பது இதன் கருத்து. தமிழ்ச் சிந்தனைக்கும் இந்தியப் பொதுச் சிந்தனைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. இந்தியப் பொதுச் சிந்தனை மரபின்படி அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் அடைய வேண்டியவை. தமிழ்ச் சிந்தனை மரபில் தொல்காப்பியர் காலந்தொட்டே அறம், பொருள், இன்பம் என்ற கருத்து மட்டுமே உண்டு. வீடு பற்றிய கருத்து கிடையாது.

இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில் தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. நம் தமிழில் சிறந்த அற இலக்கியமாக திகழ்வது திருக்குறள். நம்முடைய மானுடர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும்போது அவற்றை திருத்திக் கொள்ள அறக்கருத்துகளையும் நீதிக் கருத்துகளையும் போதிக்கும் தேவை ஏற்படுகிறது. அதனால் தோன்றிய இலக்கியம்தான் அற இலக்கியமாகும்.

 

எட்டாம் வகுப்பு |தமிழ் | 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

 எட்டாம் வகுப்பு |தமிழ் |

1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி



 












மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை

இ) அச்சுக்கலை


2.வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ………………….. என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து 

 

ஆ) வட்டெழுத்து


3.தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ.சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்

ஆ) தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் …………… என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் …………..

1. கண்ணெழுத்துகள்)
2. வீரமாமுனிவர்)

குறுவினா


1.ஓவிய எழுத்து என்றால் என்ன?

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவம் ஓவிய எழுத்து எனப்படும்.


2.ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

(i) ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக : மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் கி குறிப்பதாயிற்று.

(ii) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை, ஒலி எழுத்து நிலை எனப்பட்டது.


3.ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
 

(i) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளைப் பயன்படுத்தினர்.
(ii) புள்ளிகளைப் பயன்படுத்தினால் ஓலைகள் சிதைந்து விடும் என்பதால் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.




சிறுவினா


1.எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

(i) ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

(iv) இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.


2.தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றம் :
(i) தமிழ் எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ரு பயன்படுகின்றது.

(ii) ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக் கொம்புடை பயன்படுகின்றது.

(iii) ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால்ள பயன்படுகின்றது.

(iv) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

நெடுவினா


1.எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

முன்னுரை :
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக் கொண்டான். காலப் போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது.

வரிவடிவத்தின் தொடக்க நிலை :
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும்.

ஓவிய எழுத்து :
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை :
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் எழுத்துகள் :
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

முடிவுரை :
பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். பிறகு அச்சில் ஏற்றப்பட்டது. காலந்தோறும் வளர்ந்து வரிவடிவத்தில் பல மாற்றங்களை ஏற்று, தற்காலத்தில் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக வளர்ந்துள்ளது தமிழ் எழுத்துகள்.

 

திங்கள், 16 ஜூன், 2025

ஏழாம் வகுப்பு |தமிழ்|முதல்பருவம் 1.1 எங்கள் தமிழ்

 ஏழாம் வகுப்பு |தமிழ்|முதல்பருவம் |

1.1 எங்கள் தமிழ்

 

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் …………………..
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்

அ) வழி


2.‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
Answer:
ஆ) குரல் + ஆகும்


3.வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானலி

ஆ) வானொலி

நயம் அறிக

1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்று போல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
ருள்நெறி – கொல்லா – ல்லா
துவே – கொள்கை – ன்றும்

2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
ருள் – கொல்லா – அன்பும்
பொருள் – எல்லா – இன்பம்

3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
ரலாகும் – புகழாது – ஊக்கிவிடும்
குரலாகும் – இகழாது – போக்கிவிடும்

குறு வினா


1.தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்

(ii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

(iii) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.


2.தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

(i) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.

(ii) தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.

சிறு வினா


1.எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகின்றது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

(ii) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.

(iii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

(iv) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.


சிந்தனை வினா


கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

ஆறாம் வகுப்பு |தமிழ்|முதல்பருவம்| 1.1 இன்பத்தமிழ்

 

ஆறாம் வகுப்பு |தமிழ்|முதல்பருவம்|

1.1 இன்பத்தமிழ்


 

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

 தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு

(விடை: அ) சமூகம்)

2.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி

(விடை : ஈ) அசதி)

3.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று

(விடை: ஆ) நிலவென்று)

4.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ் எங்கள்

[விடை: ஆ) தமிழெங்கள்)



5.‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று

(விடை: ஆ) அமுது + என்ற)


6.‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்

(விடை: அ) செம்மை + பயிர்)

7.இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
அ) விளைவுக்கு – பால்
ஆ) அறிவுக்கு – வேல்
இ) இளமைக்கு – நீர்
ஈ) புலவர்க்கு – தோள்


விடை:
அ) விளைவுக்கு – நீர்
ஆ) வாழ்வுக்கு – ஊர்
இ) இளமைக்கு – பால்
ஈ) புலவர்க்கு – வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக
(எ.கா.) பேர் –நேர்
விடை :
பேர் – நேர் அமுதென்று – நிலவென்று
பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு
பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு
பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு
வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு
தோள்- வாள் அறிவுக்கு – கவிதைக்கு

குறுவினா 

1.பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

அமுதம், நிலவு, மணம்.


2.நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.

சிறுவினா


1.இன்பத் தமிழ் – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!


2.விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

(விளைவு – விளைச்சல்)
(i) நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.
(ii) நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.
(iii) நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்.

சிந்தனை வினா


1.வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?

(i) வேல் கூர்மையான ஆயுதம் அதைப்போல தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
(ii) ஆகவே தமிழ், வேலுடன் ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கத்தியின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது என்ற பழமொழியும் இதனையே விளக்கும்.